முத்துப்பேட்டை செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றிக் கொள்ள ஒரு வாரம் கெடு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 11

முத்துப்பேட்டை செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றிக் கொள்ள ஒரு வாரம் கெடு




அக்டோபர் 11: முத்துப்பேட்டை செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றிக் கொள்ள பேரூராட்சி ஒரு வாரம் கெடு வழங்கி இறுதி நோட்டீஸ். பரபரப்பு.
முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் கடந்த ஆண்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பட்டரைக்குளத்தில் நடந்த முறைக்கேடான பணிகளை எதிர்த்தும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து உயர்நீதி மன்றம் பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைக்கேடாக நடந்த பணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் படி 6 மாதங்களுக்கு முன்பு பட்டரைக்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் மற்றும் பள்ளி வாசல்கள் உட்பட ஏராளமான குடியிருப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது. 
இந்த நிலையில் அதே வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற வழிக்காட்டுதலின் படி சில மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் தாசில்தார், வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தார். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் கடந்த மாதம் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பு அகற்ற தான் அனுப்பிய மனு மீது தாசில்தார், வருவாய் கோட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை. 
மேலும் உயர் நீதி மன்றம் உத்தரவுபடி தமிழக அரசு நியமணம் செய்த தனி ஆணைப்படி அவர்கள் பணி செய்யாததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர எனக்கு அனுமதித் தர வேண்டும் என்று கடிதம் அனுப்பி இருந்தார். இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை எடுக்க முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு 40 ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து ஆக்கிரமிப்பாளர்களின் பட்டியலை பேரூராட்சியில் ஒப்படைத்தனர். அதன்படி பேரூராட்சி சார்பில் செக்கடிக்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள 10 நாள் கெடு விடுத்து முதல் நோடீஸ் வழங்கப்பட்டது. 
அதன் பிறகு ஆக்கிரமிப்பாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனாலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள முன்வரவில்லை. இது போன்று பேரூராட்சி சார்பில் 3 முறை நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டும் ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றிக் கொள்ளவில்லை. அதிகாரிகளும் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் காலதாமதப்படுத்தினர். 
இதனால் அதிர்ப்தி அடைந்த சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் 15 தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுப்படி தாங்களும் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளும் செக்கடிக்குளம் ஆக்கிரமிப்பை எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதற்குன்டான பணிகளையும் செய்யவில்லை. அதனால் தங்களது மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக கடிதம் அனுப்பினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உத்தரவுப்படி நேற்று முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு வாரம் கெடு வழங்கி இறுதி நோட்டீஸ் அனுப்பியது. இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here