அக்டோபர் 13: பிரபல ஜெர்மனி கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன், தனது நிறுவன டீசல் கார்களில் மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்து மாட்டிக்கொண்டது.
இந்த மோசடி காரணமாக ஜெர்மனியின் பொருளாதாரமே பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரு கோடியே பத்து லட்சம் கார்களைக் கண்டறிந்து அவற்றின் என்ஜின்களை மாற்றித் தருவதாக அறிவித்துள்ளது வோக்ஸ்வேகன். இந்நிலையில் உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக ஒரு செயலை செய்துள்ளார்.
உலகத்தையே அதிர்ச்சிகுள்ளாக்கிய வோக்ஸ்வேகன் மோசடி தொடர்பாக எழுத்தப்பட்டுள்ள புத்தகத்தின் உரிமையை டிகாப்ரியோவும் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பாரமவுண்ட்டும் வாங்கியுள்ளனர்.
ஏற்கனவே பல நாவல்களை வாங்கி வெற்றிகரமான திரைப்படமாக மாற்றி அவற்றில் நடித்துள்ளார் டிகாப்ரியோ. எனவே வோக்ஸ்வேகன் மோசடி தொடர்பாக எழுத்தப்பட்டுள்ள புத்தகமும் திரைப்படமாக மாறினால் அது வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு மிகப் பெரிய அடியாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
No comments:
Post a Comment