அக்டோபர் 13: உலகில் வலிமை வாய்ந்த பாஸ்போர்ட் ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுடையவையே.
ஹென்லேய் & பார்ட்னெர்ஸ் நிறுவனம் உலக நாடுகள் குடி பெயர்வு --விஸா -- பெறும் தகுதியின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 199 நாடுகளின் மதிப்புப் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 87 ஆம் இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகள் இருக்கின்றன. இவ்விரு நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவருக்கு உலகில் 173 நாடுகளுக்கு முன் கூட்டியே விஸா பெறத் தேவையில்லை. செல்லும் நாடுகளின் விமான நிலையத்தில் விஸா பெற்றுக்கொள்ளலாம்
அடுத்த இரண்டாமிடத்தில் அமெரிக்கா, ஃ பின்லேண்ட், ஸ்வீடன் ஆகிய மூன்று நாடுகள் இருக்கின்றன. இம்மூன்று நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு 172 நாடுகளில் விமான நிலையத்தில் விஸா பெற்றுக்கொள்ளலாம்.
டென்மார்க், ஃ ப்ரான்ஸ், இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, லக்ஸம்பர்க், நெதர்லேண்ட், நார்வே ஆகியன மூன்றாம் இடத்திலும் பெல்ஜியம், கனடா, நியூசிலேண்ட், போர்சுக்கல், ஸ்பெயின் ஆகியன நான்காம் இடத்திலும் ஆஸ்திரியா, அயர்லாந்து, சிங்கப்பூர், ஸ்விட்சர்லேண்ட் ஆகியன ஐந்தாமிடத்திலும் உள்ளன.
இந்தியா 87 ஆம் இடத்தில் உள்ளது. இந்தியர்களுக்கு 51 நாடுகளின் விமான நிலையத்தில் விஸா பெற்றுக்கொள்ளலாம்.
கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தானும் இராக்கும் உள்ளன. 40 நாடுகளில் மட்டுமே இவைகளுக்கு விமானநிலைய விஸா கிடைக்கும்.
No comments:
Post a Comment