அக்டோபர் 29: 300 படங்களுக்கு மேல் நடித்த முத்துப்பேட்டையை சேர்ந்த மூத்த நடிகர்க்கு நடிகர் சங்கம் நிதியுதவி.
முத்துப்பேட்டை சரீப் தெருவை சேர்ந்தவர் முகமது காசிம் மரைக்காயர் (80), பிரபல நடிகரான இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்களுடன் அதிகஅளவில் நடித்துள்ளார். பெரும்பாலும் போலீஸ் வேடமே இவர் அதிக அளவில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலான படங்களில் எம்.ஜி.ஆரை கைது செய்வது போன்று நடித்திருக்கும் காட்சிகள் முக்கியமானதாகும். இவர் நடித்த படங்களில் கருணாநிதி கதை வசனத்தில் உருவான பூம்புகார் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை தேடி தந்துள்ளது.
அந்த திரைப்படத்தில் இளங்கோவடிகள் கேரட்டர் அவருக்கு பொருத்தமாக அமைந்ததால் கருணாநிதி, எம்.ஜி.ஆர் பல இடங்களில் இவரை பற்றி புகழ்ந்து பேசி உள்ளனர். நடிகர் முகமது காசிம் மரைக்காயருக்கு பசீர்அகமது, சுல்தான், அன்சாரி, ஜின்னா என்ற 4-மகன்கள், 5 மகள்கள் என 9 குழந்தைகள். சினிமா துறை மேல் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தாலும் அவர் தனது மனைவி மற்றும் மக்கள் மீது அதிகளவு பாசம் வைத்திருப்பார் என்பது இவரின் சிறப்பான விஷயம்.
தற்பொழுது 80 வயதை தாண்டிய நிலையில் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது, அதனால் சுமார் 3 வருடங்களுக்கு மேல் பல்வேறு பகுதி தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார். சினிமா துறையில் சேர்ந்து அதிகளவில் பொருளாதாரம் சேர்க்கவில்லை என்றாலும் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களுடன் நல்ல நட்பில் இருந்துள்ளார். அதனால் இவரது குடும்பம் இன்னும் வறுமையில்தான் உள்ளது. இவரது மகன்கள் மகள்களும் பெரியஅளவில் வருமானத்தில் இல்லை.
தற்பொழுது நடிகர் முகமது காசிம் மரைக்காயர் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் திருச்சி நெடுஞ்சாலை காலனியில் வசிக்கும் இவரது இரண்டாவது மகன் சுல்தான் வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் அணிக்கு இவரது ஓட்டை இங்கிருந்து பதிவு செய்துள்ளார். தற்பொழுது நடிகர் முகமது காசிம் மரைக்காயர் உடல் நிலை சரி இல்லாமல் திருச்சி மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த நடிகர் விஷால். சங்க தலைவர் நாசர், நிர்வாகிகள் கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோரின் ஆலோசனை பேரில் மருத்துவ உதவி தொகையாக ரூ 15-ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதனைக்கண்ட நடிகர் முகமது காசிம் மரைக்காயர் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவரது மகன் சுல்தான், உறவினர் எம்.கே.எம்.இஸ்ஹாக் ஆகியோர் கூறுகையில்;: சினிமா துறையில் நடிப்பின் மீதும், நல்ல நட்பின் மீதே ஆர்வம் கொண்ட எங்களது தந்தை பொருளாதாரத்தை பற்றி நினைக்கவே இல்லை. அவர் மீது நட்பு கொண்டவர்கள் எல்லாம் தற்பொழுது இல்லாத நிலையில் இன்றைக்கு தனி நபராக இருப்பதை கண்டு வேதனை பட்டார். இதுநாள்வரை நடிகர் சங்கத்தின் எந்த தலைமையும் கண்டுகொள்ளவில்லை அதனால் அவரும் கவலைப்படவில்லை. தற்பொழுது நடந்த நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் அணி வெற்றி பெற்றதும் அவர் மகிழ்ச்சியில் உள்ளார்.
தற்பொழுது அவர் உடல் நிலையை மோசமாகி மருத்துவ மனையில் இருப்பதை கண்டு நடிகர் சங்கம் சார்பில் தலைவர் நாசர், நிர்வாகிகள் கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் நடிகர் விஷால் உதவி வழங்கி இருப்பது மகிழ்ச்சியாகவும், அவருக்கு கிடைத்த அடையாளமாகவும் கருதுகிறோம். வுழங்கியது சொற்ப பணமாக இருந்தாலும் அதனை பொக்கிஷமாக கருதுகிறோம் என்றனர்.
தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment