மார்ச் 01: முத்துப்பேட்டை ஆசாத் நகரில் புதியதோர் உதயமாக அல்மஹா மெகா மால் இன்று முதல் துவங்கியது. சமீபத்தில் ஐரோப்பிய பல்கலைக் கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட முத்துப்பேட்டை தொழிலதிபரும், முத்துப் பேட்டை அல்மஹா கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான ஹைதர் அலி அவர்கள் நிறுவனராக செயல்படும் அல்மஹா மெகாமால் நிறுவனத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். விழாவில் முன்னாள் டிஜிபி அலக்சாண்டர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஆடுதுறை ஷாஜஹான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
அல்மஹா மெகா மால். மளிகை முதல் தங்க நகைகள் வரை வித விதமான ஆடம்பர பொருட்க ளும் ஒரே இட த்தில் பெற முத்துப்பேட்டை நகரில் முதல் முறையாக 15 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது.
தள்ளுபடி விலையிலும், மொத்த விலையிலேயே சில்லரையாகவும், திருமணம் முதல் அனைத்து விஷேங்களுக்கும் தேவையான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இதன் திறப்பு விழா இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. இது குறித்து இதன் நிறுவனர் டாக்டர் எஸ்.எம்.ஹைதர் அலி கூறுகையில், முத்துப்பேட்டைக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் எழில்மிகு இயற்கை அழகும், அலையாத்தி காடுகளும் போன்றவை உள்ளன. மேலும் பெருமை சேர்க்கின்ற வகையில் இந்த அல்மஹா மெகா மால் அமைக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு பொருட்களும் இல்லை என்று செல்லாத வகையில் மலைப்போல் விதவிதமாக குவித்து வைத்துள்ளோம். லாபம் எங்களுக்கு நோக்கமல்ல. இப்பகுதி மக்களின் பயன்தான் எங்களுக்கு முக்கியம் என்ற நோக்கத்துடன் துவங்குகிறோம். இதனை அழைப்பாகவே ஏற்று அனைவரும் திறப்பு விழா விற்கு வருகைத் தந்து பெருமை சேர்க்கவும், தொடர்ந்து ஆதரவு தரவும் வேண்டுகிறேன் என்றார்.
புகைப்படம்: அதிரை நியூஸ்
No comments:
Post a Comment