மார்ச் 03: முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மிக பெரிய பரப்பளவிலான பட்டரைக்குளம் உள்ளது. ஒரு காலத்தில் நகர மக்கள் பயன்பாட்டிலும், இப்பகுதியின் நீர் ஆதாரமாகவும் இக்குளம் இருந்தது.
இந்நிலையில் சில ஆண்டுகளாக இக்குளம் ஆக்கிரமிப்பில் சிக்கி சுருங்கி குட்டையாக மாறியது. குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதால் குளம் வறண்டு சாக்கடை நீர் தேங்கும் இடமாக மாறியது.
இந் நிலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக பேரூராட்சி நிர்வாகம் சில மாதங்களுக்கு முன் ரூ. 27 லட்சம் செலவில் தற்போது குறுகி காணப்படும் குளத்தை சுற்றிலும் தடுப்புச் சுவர் கட்டும் பணியை தொடங்கியது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் என்பவர், இந்த பணி ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக செய்து தரும் வகையில் இருப்பதாகவும், பணியை தடுத்து நிறுத்த கோரியும், செலவிடும் ரூ.27 லட்சத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட் டிசம்பர் 4ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்ற கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை.
இன்று காலை உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. ஆட்டோக்கள் போடும் வழியாக சென்று மணிஐயர் வீட்டு பின்புறமும், பின்னர் ஆண்டிகுளம் மரைக்காவீட்டு படித்துறையிலிருந்து 3M ஹோட்டல் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடை பெற்று வருகிறது .
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்
புகைப்படம்: KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment