பிப்ரவரி 02: திப்பு சுல்தான் கோட்டை முறையாக பராமறிக்க வேண்டும் சமூக ஆர்வளர்கள் வேண்டுகோள்.
மைசூரில் மாவீரன் திப்பு சுல்தான் கட்டி எழுப்பிய கோட்டை வீரத்தின் அடையாளமாய் காட்சியளித்தது. கலைநயம் நிறைந்த கட்டடக்கலை கற்காலத்தில் செதுக்கப்பட்ட தூண்கள் அதிசயிக்க வைக்கும் சுரங்க பாதைகள் பள்ளம் நிறைந்த பதுங்கு குழிகள் போரில் வீழ்த்தப்பட்ட எதிரிகளை அடைத்து வைப்பதற்காகவே பிரத்தியேகமாக கட்டப்பட்டுள்ள சிறைச்சாலைகள் போர் வீரர்கள் ஓய் வெடுப்பதர்காகவே சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள தனி அறைகள்
மக்களின் குறைகளை கேட்டறிய தனி மைதானம் தொழுகை நடத்துவதற்கு தனி கூடாரம் என மாவீரன் திப்பு சுல்தான் அவர்கள் கட்டி எழுப்பிய கோட்டையின் சிறப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
மாவீரன் திப்பு சுல்தான் அவர்கள் பிறந்த ஊரான மைசூர் விஜயநகரம், ஓர் மத நல்லிணக்க பூமியாக விளங்குகின்றது. காரணம் மாவீரன் திப்பு சுல்தான் அவர்கள் அந்த பகுதியில் இந்து மக்கள் வழிபடுவதற்காக தனது சொந்த நிலத்தில், சொந்த செலவில் பல்வேறு கோவில்களை தானமாக கட்டி கொடுத்துள்ளார்.
விஜயநகரத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த கர்நாடகத்திலும் இவர் பல்வேறு கோவில்களை கட்டி கொடுத்துள்ளார் என்பதற்கு, அங்கு வசிக்கும் அம்மாநில இந்து மக்கள் இன்று வரை திப்பு சுல்தான் மீது வைத்திருக்கும் அன்பே சாட்சியாகும். இதற்கான கல்வெட்டுகளை அங்குள்ள அனைத்து கோவில்களிலும் காண முடிகிறது.
மாவீரன் ஹைதர் அலி அவர்கள் தனது மகனான மாவீரன் திப்பு சுல்தான் அவர்களுக்கு பரிசாக வழங்கிய பீரங்கி இன்று வரை பாதுகாக்கபட்டு வருகின்றது .
இருப்பினும் மாவீரன் திப்பு சுல்தானிற்கு பிறகு வந்த ஆட்சியாளர்களின் அரண்மனைகளுக்கு வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவம் திப்பு சுல்தான் கட்டி எழுப்பிய கோட்டைகளுக்கு வழங்கப் படவில்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும் .
மைசூர் சிங்கம் என்று அனைத்து சமுதாய மக்களால் வர்ணிக்கப்படும் போற்றப்படும் மாவீரன் திப்பு சுல்தான் அவர்கள் கட்டி எழுப்பியுள்ள கோட்டை போதுமான பராமரிப்பு இன்றி, சிதிலமடைந்து காணப்படுகிறது .
மாவீரன் திப்பு சுல்தான் கோட்டை உரிய முறையில் பராமரிக்கப்பட்டால், உண்மை வரலாற்றை நாளைய தலைமுறைகள் தெரிந்து கொள்ளும். சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் .அரசுக்கு அதிக வருமானத்தையும் ஈட்டி தரும்.
சமூக பார்வையுடன் ....
ஜே :ஷேக் பரீத்
No comments:
Post a Comment