அமீரகம் [U.A.E.] விசிட் விசா மற்றும் டூரிஸ்ட் விசா கட்டணம் உயர்வு!! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 21

அமீரகம் [U.A.E.] விசிட் விசா மற்றும் டூரிஸ்ட் விசா கட்டணம் உயர்வு!!

visa

ஜனவரி 21: ஐக்கிய அரபு அமீரகத்தில் டூரிஸ்ட் மற்றும் விசிட் விசா கட்டணம் உயர்வு!!  
டூரிஸ்ட் மற்றும் விசிட் விசாவின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் 10 நாட்கள் மற்றும் 30 நாட்கள் நீட்டிப்பு வசதியையும் ரத்து செய்துள்ளதாக குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறைக்கான பொது இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை 2015 ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

முப்பது நாட்கள் மட்டும் தங்க அனுமதி கொண்ட , ஒரு முறை மட்டும் உள் நுழைவதற்கான டூரிஸ்ட் விசாவின் (Tourist Visa - Single Entry – 30 Days) புதிய கட்டணம் யுஏயி திர்கம் 250, இதற்கான முந்தய பழைய கட்டணம் யுஏயி திர்கம் 210.

முப்பது நாட்கள் மட்டும் தங்க அனுமதி கொண்ட பல முறை உள் நுழைவதற்கான டூரிஸ்ட் விசாவின் (Tourist Visa - Single Entry – 30 Days) புதிய கட்டணம் யுஏயி திர்கம் 350.

விசிட் விசாவின் கட்டணமும் அதிகரித்துள்ளதாகவும், அதன்படி முப்பது நாட்கள் மட்டும் தங்க அனுமதி கொண்ட விசிட் விசாவின் (Visit Visa – 30 Days) புதிய கட்டணம் யுஏயி திர்கம் 350 எனவும் இதற்கு திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகை (Refundable Deposit) செலுத்தப்பட வேண்டும் எனவும், இந்த விசாவில் கால நீட்டிப்பு வசதி இல்லை (Non-Extendable) எனவும் தெரிவிக்கப்படுள்ளது. இதற்கான முந்தய பழைய கட்டணம் யுஏயி திர்கம் 300.

அதேபோல தொண்ணூறு நாட்கள் மட்டும் தங்க அனுமதி கொண்ட விசிட் விசாவின் (Visit Visa – 90 Days) புதிய கட்டணம் யுஏயி திர்கம் 790 எனவும் இதற்கும் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகை (Refundable Deposit) செலுத்தப்பட வேண்டும் எனவும், இந்த விசாவிலும் கால நீட்டிப்பு வசதி இல்லை (Non-Extendable) எனவும் தெரிவிக்கப்படுள்ளது. இதற்கான முந்தய பழைய கட்டணம் யுஏயி திர்கம் 660 எனப்து குறிப்பிடத்தக்கது.


தகவல்: வீக்களத்தூர்.in

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here