ஜனவரி 21: துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம் (23-01-2015)
துபாயில் 66-வது இந்திய குடியரசு தின விழாவையொட்டி ஈமான் கலாச்சார மையம் ரத்ததான முகாமை துபாய் ரத்ததான மையத்துடன் இணைந்து 23.01.2015 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடத்த இருக்கிறது.
இந்த தகவலை ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்தார்.
ரத்ததானம் செய்ய விரும்புவோர்
* 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
* ஏற்கனவே ரத்ததானம் செய்து இரண்டரை மாதங்களுக்கு மேற்பட்டு இருக்க வேண்டும்
* எமிரேட்ஸ் ஐடி, டிரைவிங் லைசன்ஸ், லேபர் கார்டு அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் வரவேண்டும்
ரத்ததானம் செய்வோர் உடலில் தாங்கள் கொடுத்த ரத்தம் 48 மணி நேரத்தில் மீண்டும் கிடைத்து விடும்.
எனவே உயிர் காக்கும் ரத்ததானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரத்ததானம் செய்வதால் நமக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று அஞ்ச தேவையில்லை. ரத்ததானம் செயவது நம் உடலுக்கு ஆரோக்கியமானது என்றும் உடலில் தானாகவே 48 மணிநேரத்தில் அதே அளவு ரத்தம் உற்பத்தியாகி விடுவதாக மருத்துவகுறிப்புகள் தெரிவிக்கின்றன.
ரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களை கீழக்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதுவை ஹிதாயத் : 050 51 96 433
கீழை ஹமீது யாசின் : 052 777 83 41
அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் : 055 41 45 068
http://imandubai.com/iman/?page_id=2186 என்ற இணைப்பில் சென்று பதிவு செய்யலாம்.
அல்லது
எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment