ஜனவரி 17:முத்துப்பேட்டை மருதங்காவெளி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் பாலசுந்தரம்(35). இவர் மன்னார்குடி சாலையில் உள்ள மாத கோவில் அருகே பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பொங்கலை முன்னிட்டு கடையை பூட்டி விட்டு சென்றவர் மீண்டும் நேற்று காலை கடையை திறக்க சென்ற போது பூட்டு உடக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபொழுது கடையில் இருந்த 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் பிஸ்கட், சிகிரெட் போன்ற பொருட்கள் யாரோ மர்ம நபர் உள்ளே புகுந்து திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பாலசுந்தரம் முத்துப்பேட்டை காவல் நிலையில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment