ஜனவரி 17: முத்துப்பேட்டையில் மீலாதுவிழா பொது கூட்டத்திற்கு போலீஸ் திடீர் தடை. பதற்றம். பரபரப்பு. போலீஸ் அனுமதியை மீறி கூட்டம் நடந்தது.
முத்துப்பேட்டை அனைத்து முஸ்லிம் ஜமாத் சார்பில் நேற்று மீலாது நபி விழா பொது கூட்டம் நடத்துவதற்காக ஒரு வாரத்துக்கு முன்பே நிகழ்ச்சியின் தலைவர் ஜின்னா என்பவர் முத்துப்பேட்டை காவல் துறையில் அனுமதி பெற்றிருந்தார். அதன் படி முத்துப்பேட்டை பெரிய கடைத்தெரு முகைதீன் பள்ளி வாசல் அருகே கூட்டம் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றது. இந்த நிலையில் கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல் துறை திடீரென்று கூட்டம் நடத்தக்கூடாது என்று தடை விதித்து நேற்று முன்தினம் சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டில் அனுப்பினர். ஆனால் விழா கமிட்டியினர் நோட்டீஸ் வாங்க வாங்க மறுத்து திட்டமிட்டப்படி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். இதனால் காவல் துறையினர் வருவாய் துறை மூலம் மீலாது விழா கூட்டம் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தடை செய்யப்பட்டதாகவும் கூறி விழா கமிட்டியின் தலைவர் ஜின்னாவின் வீட்டு வாசலில் நோட்டிஸை ஒட்டினர். இதனால் அனைத்து முஸ்லிம் ஜமாத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. பின்னர் தெற்கு தெரு அரபு சாஹிப் பள்ளி வாசிலில் ஜமாத் தலைவர் ராவுத்தர் தலைமையில் அனைத்து ஜமாத் நிர்வாகி மற்றும் நூற்றுக்கணக்கானோர் கூட்டமாக கூடினர். இதில் த.மு.மு.க சார்பில் வக்கில் தீன் முகம்மது, சம்சுதீன், எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் சித்தீக், முஸ்லிம் லீக் கட்சி சார்பில் முகம்மது அலி, தம்பி மரைக்காயர், மனித உரிமை கண்ணகாணிப்பாளர் பசீர் அகம்மது, ஜமாத் நிர்வாகி நாசர் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வந்து ஜமாத் நிர்வாகிகளிடம் ஒரு வாரம் கழித்து நிகழ்ச்சியை நடத்தும் படி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் ஜமாத் நிர்வாகிகள் திட்டமிட்டப்படி கூட்டம் நடத்துவோம் என்று உறுதியாக கூறினார்கள். இதனால் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஏமாற்றத்துடன் திரும்பினார். அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தடையை மீறி நேற்று மாலை மீலாதுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
படம் செய்தி:
முத்துப்பேட்டையில் மீலாதுவிழா பொதுக் கூட்டத்துக்கு போலீஸ் தடைவிதித்தால் பதற்றம் ஏற்பட்டு தெற்கு தெரு அரபு சாஹிப் பள்ளி வாசிலில் ஜமாத் தலைவர் ராவுத்தர் தலைமையில் அனைத்து ஜமாத் நிர்வாகி மற்றும் நூற்றுக்கணக்கானோர் கூட்டமாக கூடினர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment