ஜனவரி 18: முத்துப்பேட்டை அனைத்து சுன்னத் ஜமாத் நிர்வாகமும், திருவாரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையும் இணைந்து மீலாது நபி விழாவை முன்னிட்டு பொது கூட்டம் முகைதீன் பள்ளிவாசல் திடலில் நடைபெற்றது. ஜமாஅத்துல் உலமா மாவட்ட தலைவர் மஹ்மூதுல் ஹசன் தலைமை வகித்தார். அனைத்து பள்ளி வாசலின் இமாம்கள் முன்னிலை வகித்தனர். புதுப்பள்ளி வாசலின் இமாம் சௌக்கத் அலி கிராத் ஓதினார். முன்னதாக சோழநாடு நெய்னாமுகம்மது வரவேற்று பேசினார். இதில் ரஹ்மத் டிரஸ்ட் பள்ளி வாசலின் இமாம் ரஹ்மத்துல்லா மன்பா, மக்கா பள்ளியின் இமாம் இமாமுதீன் தாவூது, கட்டிமேடு இமாம் அப்துல் ரஹ்மான் ஆகியோர் துவக்கி வைத்து பேசினர். இதில் சன்மார்க்க ஷரீஅத் சங்கநாதம் என்ற தலைப்பில் பெங்களுர் அரபி கல்லூரி பேராசிரியர் மௌலானா சைஃபுத்தீன் ரஷாதி ஹள்ரத் பேசினார். கூத்தாநல்ல}ர் பெரிய பள்ளி வாசல் இமாம் சர்தார் முகைதீன் உலவி, லெட்சுமாங்குடி இமாம்கள் முகம்மது இல்யாஸ் உலவி, அபுல் ஹசன், பொதக்குடி இமாம் சலாகுதீன் பாஜில் பாகவி, திருவாரூர் இமாம் முகம்மது யாசின் பாகவி, அடியக்கமங்களம் இமாம் முகம்மது உசேன் தாவூதி உட்பட பலரும் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். மேலும் நிகழ்ச்சியில் கமாலுதீன் பைஜி, காதர்கனி ஆகியோரின் இஸ்லாமிய இன்னிசை நிகழச்சி நடைபெற்றது. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அபூபக்கர் சித்தீக், த.மு.மு.க சார்பில் சம்சுதீன், வக்கீல் தீன்முகம்மது, பேரூராட்சி கவுன்சிலர் நாசர், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் முகைதீன் அடுமை, துணைத் தலைவர் முகம்மது அலி, ஆசாத் நகர் ஜமாத் தலைவர் முகம்மது அலி ஜின்னா உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் முகைதீன் பள்ளி வாசல் தலைவர் முகம்மது ராவுத்தர் நன்றி கூறினார்.
படம் செய்தி:
முத்துப்பேட்டை அனைத்து சுன்னத் ஜமாத் நிர்வாகமும், திருவாரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையும் இணைந்து மீலாது நபி விழாவை முன்னிட்டு பொது கூட்டம் முகைதீன் பள்ளிவாசல் திடலில் நடைபெற்றது.
தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment