ஜனவரி 28: முன் அறிவிப்பு இல்லாமல் சாலை ஓர தடுப்பு சுவர் கட்ட நெடுஞ்சாலை துறை செக்கடி குளத்தில் பணி மேற்கொண்டதால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு.
முத்துப்பேட்டையில் மிகப்பெரிய பரபரப்பளவில் பட்டுக்கோட்டை சாலையில் செக்கடி குளம் உள்ளது. அதனை சுற்றி அப்பகுதியைச் சேர்ந்த தனியார்கள் ஆக்கிரமித்துள்ளதால் நாளுக்கு நாள் குளம் சுருங்கி கொண்டே வருகிறது.
இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் சமூக ஆர்வளர்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர் வாரி சுத்தம் செய்து தரவேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலையும் ஆக்கிரமிக்கப்பட்டதால் தற்பொழுது குளத்திற்கு தண்ணீர் வரும் நிலையும் கேள்வி குறியாகி உள்ளது. அதனால் நாளுக்கு நாள் குளத்தின் பரப்பளவு குறைந்து குளம் முழுவதும் ஆக்கிரமிக்கப்படாலாம் என்ற கேள்வி குறியும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சாலை பகுதியில் உள்ள குளத்திற்குள் ஜெ.சி.பி. இயந்திரம் ஒன்று கரையில் உள்ள மண்ணை வெட்டி குளத்தை தூற்றி சமப்படுத்தும் வேலையில் ஈடுப்பட்டு வந்தது.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜெ.சி.பி. இயந்திரம் டிரைவரிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரனாக கூறியுள்ளார். இதனால் அதிற்ப்தி அடைந்த அப்பகுதியினர் நூற்றுக்கணக்கானோர் குளத்தின் முன்பு திரன்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கண்ட ஜெ.சி.பி. இயந்திர டிரைவர் தப்பி ஓடி ஒழிந்தார். இதனால் மக்களுக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டு பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பணிகள் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.
அதனால் யாரேனும் இடத்தை ஆக்கிரமிக்க செய்த பணியா? என்று மக்களுக்கு மேலும் சந்தேகம் வந்தது. இதனையடுத்து சமூக ஆர்வளர் முகம்மது மாலிக் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடன் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமார் ஆகியோர் வந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இறுதியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது நெடுஞ்சாலை துறையினர் தான் பேரூராட்சி அனுமதி இல்லாமலும், முன் அறிவிப்பு இல்லாமலும் தடுப்பு சுவர் கட்ட பணி மேற்கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.
அதன் பிறகே அப்பகுதி பொதுமக்களுக்கு தெளிவு ஏற்பட்டு களைந்து சென்றனர். இந்த நிலையில் சமூக ஆர்வாளர்கள் சிலர் குளத்தை தூர்த்து பணியை மேற்கொள்ள கூடாது என்று பேரூராட்சி நிர்வாகத்திடமும், நெடுஞ்சாலை துறையிடமும் புகார் தெரிவித்ததால் தடுப்பு சுவர் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.
1. முத்துப்பேட்டை செக்கடி குளத்தில் முன் அறிவிப்பின்றி நெடுஞ்சாலை துறை ஜெ.சி.பி. இயந்திரத்தைக் கொண்டு பணி மேற்கொண்டதால் மக்கள் மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டு கூட்டமாக கூடினர்.
2. சம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் போலீசார்.
தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment