ஜனவரி 18: முத்துப்பேட்டையில் தடையை மீறி மீலாது நபி பொதுக்கூட்டம் நடத்திய 4-பேர் மீது போலீஸ் வழக்கு!
முத்துப்பேட்டையில் நேற்று முன்தினம் மாலை அணைத்து முஸ்லீம் ஜமாஅத் சார்பில் மீலாது நபி பொதுக்கூட்டம் முகைதீன் பள்ளி வாசல் திடலில் நடைப்பெற்றது. அதற்கு கூட்டம் நடத்தியவர்கள் முறைப்படி அனுமதி பெற்று இருந்தனர். இந்தநிலையில் முத்துப்பேட்டை காவல் துறை சட்ட ஒழுங்கு காரணம் காட்டி திடீரென்று அந்த கூட்டத்திற்கு தடை விதித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திட்டமிட்டபடி கூட்டம் நடத்துவோம் என்று ஜமாத்தினர் அறிவித்து கூட்டத்தை நடத்தினர.; இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் கூட்டத்தை முன்னின்று நடத்திய ஆசாத்நகர் ஜமாஅத் தலைவர் முகமது அலி ஜின்னா, எஸ்.டி.பி.ஐ.கட்சி நிர்வாகி அபூபக்கர் சித்திக், முகைதீன் பள்ளி தலைவர் முகமது ராவுத்தர், த.மு.மு.க நகர தலைவர் சம்சுதீன் ஆகிய பேர் 4- பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment