நவம்பர் 24: தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 19,500 கோடி மதிப்புள்ள 14 திட்டங்களை கைவிட ரயில்வே அமைச்சகங்கள் முடிவு செய்துள்ளது. 1992-1993 முதல் 2012 ஆண்டு வரை அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களில் 160 திட்டங்களின் பணிகள் முடிவடியாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து தமிழகத்தில் சத்தியமங்கலம் வரை 260 கிமீ தூரத்திற்கு சுமார் ரூ. 14,000 கோடி மதிப்பில் ரயில் பாதை அமைத்தல் உட்பட தென் இந்தியாவில் மட்டும் 39 திட்டங்களுக்கான பணிகள் சிறிது கூட நடைபெறவில்லை.
இதையடுத்து பணிகள் தொடங்காத ரயில்வேக்கு இழப்பை ஏற்படுத்தும் 160 திட்டங்களையும் கைவிட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 19,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் உள்பட தென் இந்தியாவில் மட்டும் 47 திட்டங்கள் கைவிடப்பட்டஉள்ளன. இவற்றில் 9 திட்டங்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் மம்தா பேனர்ஜி ரயில்வே அமைச்சராக அறிவிக்கப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 14 ரத்து செய்ய்ப்பட்ட ரயில்வே திட்டத்தில் முத்துப்பேட்டை மற்றும் அதிராம்பட்டினம் மக்கள் பயனடையக்கூடிய திருவாரூர்-காரைக்குடி அகல ரயில்பாதை திட்டமும் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நமதூர் மக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தகவல்: அதிரைப்பிறை
No comments:
Post a Comment