துபாய் உள்பட அரபு நாடுகளில் கடும் பனி மூட்டம்: விமானங்கள் தாமதம்!! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, November 24

துபாய் உள்பட அரபு நாடுகளில் கடும் பனி மூட்டம்: விமானங்கள் தாமதம்!!





நவம்பர் 24: சீதோசன நிலை மாறுதலை தொடர்ந்து யுஏஇ தலைநகர் அபுதாபி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடர்த்தியான பனியும், குளிரும் நிலவுகிறது. அபுதாபி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை நேரத்திலும் மூடுபனியாக இருந்து வருகிறது. இதனால் அபுதாபியில் இருந்து அதிகாலை புறப்பட வேண்டிய 44 விமானங்கள் சுமார் 4 நேரம் தாமதமாகவும், சில விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன. 



மேலும் கொழும்பு, தோஹா, குவைத், தம்மாம், சீசெல்ஸ் மற்றும் லண்டன் ஆகிய நகரங்களிலிருந்து வந்த விமானங்கள் அல் அய்ன், அல் பத்தீன் ,துபாய் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. 

இது குறித்து எத்திஹாத் விமான நிறுவனம் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு பனிகள் அடர்ந்திருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் வருவது தெரியாத அளவிற்கு கடும் பனி மூட்டமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக வாகனங்களை இயக்கும்படி காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தகவல்: வீகளத்தூர்.in

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here