ஜனவரி 02:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
முத்துப்பேட்டை புகாரி ஷரீபு மஜ்லிஸ் 24 ம் ஆண்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (03-01-2014) காலை சுபுஹ் முதல் மஜ்லீஸ் தெற்குத்தெரு – அரபுசாகிப் பள்ளி வாசல் மதரஸாவில் துவங்க உள்ளது.
அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 23 ஆண்டுகளாக நமதூரில் சிறப்புடன் நடைபெற்று வரும் புகாரி ஷரீபு மஜ்லீஸின் 24 ஆம் ஆண்டு நிகழ்வு இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1435 ரபியுல் அவ்வல் பிறை 1 (03.01.2014) வெள்ளிக்கிழமை தொடங்கி ரபியுல் அவ்வல் பிறை 30 நிறைவு பெறவிருக்கின்றது.
காலை 7.45 ஹதீஸ் ஓதி, அதன் விளக்கம் காலை 8.30 மணி வரை நடைபெறும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் அடங்கிய ஹதீஸ் தொகுப்புகளின் விளக்கம் கேட்டு பயன்பெற வருகை தந்து கண்ணியத்துடன் மஜ்லிஸை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
புகாரி ஷரீபு மஜ்லீஸ் மற்றும்
முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத்.

No comments:
Post a Comment