ஜனவரி 04: துபாயில் தற்போது இலவசமாக பார்க்கிங் செய்யக்கூடியதாக உள்ள இடங்களில் பார்க்கிங் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன. 2014 ஆண்டு இந்த புதிய மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன என்ற தகவலை, துபாய் சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் (RTA – Roads and Transport Authority) அறிவித்துள்ளது.
தற்போது துபாயில் டவுன்டவுனின் முக்கிய பகுதிகளில் பார்க்கிங் மீட்டர்கள் உள்ளன. ஆனால், நகரின் மையப்பகுதிக்கு வெளியேயுள்ள பல இடங்களில் பார்க்கிங் மீட்டர்கள் கிடையாது. இதனால் சற்று தொலைவில் பார்க்கிங் செய்துவிட்டு வந்தால் பார்க்கிங் கட்டணத்தை செலுத்த தேவையில்லை.
அடுத்த ஆண்டு முதல், மையப்பகுதிக்கு வெளியேயுள்ள ஏரியாக்களிலும், கட்டண பார்க்கிங் முறை நீடிக்கப்படவுள்ளது. முதல் கட்டமாக, அல்-பார்ஷா (AL BARSHA), அல்-குவோஸ் (AL QUSAIS), ஹொர் அல்-அன்ஸ் (HOR AL ANZ), அல்-நாதா (AL NAHDA) பகுதிகளில் புதிய பார்க்கிங் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.
நகரின் பகுதிகளில் போக்குவரத்தின் அளவு, குடியிருப்போரின் எண்ணிக்கை, காலியாகவுள்ள பார்க்கிங் இடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து கணித்து, எந்தெந்த பகுதிகளில் பார்க்கிங் மீட்டர்கள் அமைப்பது என முடிவு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது RTA. தற்போது துபாயில் 111,026 கட்டண பார்க்கிங் மீட்டர்கள் உள்ளன. மேலும் 10,000 புதிய மீட்டர்கள் அமைக்கப்படவுள்ளன.
புதிய ஆண்டில், சற்றே அதிகம் நடக்க வேண்டியிருக்கும்.. அதனாலென்ன, எக்சர்சைஸ் நல்லதுதானே!
தகவல்: விறுவிறுப்பு


No comments:
Post a Comment