R.B.I உத்தரவின் படி வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் ரூபாய் நோட்டுகளில் எழுதப்பட்டிருந்தால் செல்லாது. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, December 23

R.B.I உத்தரவின் படி வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் ரூபாய் நோட்டுகளில் எழுதப்பட்டிருந்தால் செல்லாது.


டிசம்பர் 23: ரூபாய் நோட்டுகளில் உள்ள வாட்டர் மார்க் பகுதியில் பேனா, பென்சிலால் எழுதும் வழக்கம் பலரிடம் இருந்து வருகிறது. பெயர் முகவரிகளை எழுதுவது, வங்கி கணக்கு எண் எழுதுதல், காதலர்கள் பெயர்களை எழுதுவது, சிலர் மத சம்பந்தப்பட்ட வாசகங்களை எழுதுவது, ரப்பர் ஸ்டாம்பிங் செய்வது, எண்களை எழுதுவது போன்றவற்றை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் ரிசர்வ் வங்கி அவ்வாறு ரூபாய் நோட்டுகளில் எழுத கூடாது என்று பலமுறை அறிவித்துள்ளது. இருப்பினும் ரூபாய் நோட்டுகளில் எழுதுவது குறையவில்லை. 
இந்தநிலையில் ரூபாய் நோட்டுகளில் எழுதப்பட்டிருந்தால் அவை வரும் 2014 ஜனவரி 1ம் தேதி முதல் செல்லாதது ஆகிவிடும் என்று தகவல் பரவி வருவது மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில கடைகாரர்கள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம் என்றும் இப்போதே கூறத் தொடங்கியுள்ளனர்.

வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் இதர பிரிவினர் தொடர்ந்து வங்கி நோட்டுகளின் மேல் எழுதி வருவது வங்கியின் ‘கிளீன் நோட்‘ கொள்கைக்கு எதிரானது ஆகும் என்பதை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. எனவே எதுவாக இருந்தாலும் ரூபாய் நோட்டுகளின் மேல் எழுதக்கூடாது. இதனை போன்று நோட்டுகளின் மேல் பின் அடித்தல் கூடாது, இது நோட்டுகளின் ஆயுள் காலத்தையும் குறைக்கும் என்றும் ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமும் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக வங்கி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: 
எந்த ஒரு நோட்டுக்கட்டின் மேலும் பின் அடிப்பதை வங்கிகள் விடவேண்டும். வங்கிகள் ரூபாய் நோட்டுகளை, மீண்டும் புழக்கத்திற்கு விடக்கூடியவை, விட முடியாதவை என்று தரம் பிரித்து சுத்தமான நோட்டுகளையே மக்களுக்கு வழங்க வேண்டும். பணப்பெட்டக அறைகள் கொண்ட வங்கிகள் மூலம் அழுக்கடைந்த நோட்டுகளை பின் அடிக்காத நிலையிலேயே ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

'கிளீன் நோட்' கொள்கை அடிப்படையில் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை அழுக்கடைந்த நோட்டுகளாக கருதி அவற்றை மீண்டும் புழக்கத்தில் விடுவதை தவிர்த்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மற்றபடி எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாது என்று  எந்த ஒரு உத்தரவும் இல்லை. நோட்டின் மேல் உள்ள வெள்ளை நிற நீர்குறியீட்டின் மேல் எழுதுவதை வங்கிகளும் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எக்ஸ்ட்ரா தகவல்:

இந்தியாவில் 1700களில் முதல்முறையாக கரன்சி நோட்டுக்கள் அச்சிடப்பட்டது. இந்துஸ்தான் வங்கி, வங்காளம் மற்றும் பீகார் மத்திய வங்கி, வங்காள வங்கி ஆகியவை நோட்டுக்களை அச்சிட்டன.

நாட்டின் நலன் கருதி ........
இனி ரூபாய் நோட்டுகளை மதிப்போம், கிருக்கல்களைத் தவிர்ப்போம்...

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here