வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகளுக்கு புதிய கஸ்டம்ஸ் படிவம் ஜனவரி முதல் அறிமுகம்! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, December 23

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகளுக்கு புதிய கஸ்டம்ஸ் படிவம் ஜனவரி முதல் அறிமுகம்!









டிசம்பர் 23 : வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், ஜனவரி 1ம் தேதி முதல் புதிய கஸ்டம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கம் மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள் கூறியதாவது இந்தியாவிற்கு வரும் விமான பயணிகளுக்காக வழங்கப்படும் இமிகிரேஷன் படிவத்துடன் பிரித்து எடுக்க கூடியவகையில் சுங்க விவரங்கள் அடங்கிய அட்டையும் இருக்கும். இது தற்போது நடைமுறையில் இருக்கிறது. இந்த நடைமுறை மாற்றப்பட்டு, “இந்தியன் கஸ்டம்ஸ் டிக்லெரேஷன் ஃபாம்” (Indian Customs Declaration Form) என்ற பெயரில் புதிய விண்ணப்ப படிவம் விமான பயணிகளுக்கு வழங்கப்படும். இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பயணிகள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த புதிய நடைமுறை 2014 ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படும். இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் இந்திய பயணிகள் இமிகிரேஷன் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here