அபுதாபியில் மேலும் ஒரு தமிழ் பள்ளியை மூட ஐக்கிய அரபுக் எமிரேட்ஸ் உத்தரவு. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 3

அபுதாபியில் மேலும் ஒரு தமிழ் பள்ளியை மூட ஐக்கிய அரபுக் எமிரேட்ஸ் உத்தரவு.


அக்டோபர் 03: வெளிப்படையான பாதுகாப்புக் காரணங்களுக்காக அபுதாபியின் பள்ளிக் கல்விக் கழகம் இந்தியப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் தற்போது மற்றுமொரு பள்ளி மூடப்பட உள்ளது. சமீபகாலமாக, அபுதாபியின் அரசு கல்விக் கழகம் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்றுவரும் இந்தியப் பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கடந்த 2008 ஆம் ஆண்டில் இதுபோன்று 72 இந்தியப் பள்ளிகள் நடைபெற்று வந்நிலையில்,வெளிப்படையான பாதுகாப்புக் காரணங்களுக்காக அபுதாபியின் கல்விக் கழகம் இத்தகையப் பள்ளிகளை மூட ஆரம்பித்தது. அந்த வகையில், அபுதாபியில் இயங்கி வரும் லிட்டில் பிளவர் தனியார் பள்ளியில் சுமார் 570 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். தற்போது இந்தப் பள்ளியை இந்த வருடத்துடன் மூடிவிடுமாறு அபுதாபி கல்விக் கழகம் அறிக்கை அனுப்பியுள்ளதாக பள்ளி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால், இப்பள்ளியில் பயிலும் பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மற்றொரு சிறந்த பள்ளியைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சிலர் தங்கள் பிள்ளைகளை இந்தியாவில் படிக்க வைக்கலாமா என ஆலோசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில்,சென்ற ஜூலை மாதம் பள்ளி விடுமுறையின்போது தங்களுக்கு இந்த அறிக்கை வந்ததாகவும் அதனால் செப்டம்பரில் பள்ளி திறந்தவுடன் பெற்றோர்களிடம் இந்த அறிக்கை குறித்த தகவல் அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளித் தலைவியான மேரி தாமஸ், ‘பெற்றோர்களை கல்வி ஆண்டு இறுதிவரை பொறுமையுடன் இருக்கும்படியும், அபுதாபி கல்வி நிர்வாகம் இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து தரும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here