அக்டோபர் 12: துபாயில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் 11வது மாடியில் இருந்து குழந்தையோடு கீழே விழுந்த இந்தியப்பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக பலியாயினர். அவர்களின் மரணம் கொலையா, தற்கொலையா என விசாரித்து வரும் போலீசார், சந்தேகத்தின் பேரில் இளம்பெண்ணின் கணவரைக் கைது செய்துள்ளனர். துபாயின் ஜுமைரா பகுதியில் உள்ள மன்ஹாட்டன் டவர் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் 11ஆவது மாடியில் ஒரு இந்தியக் குடும்பம் வசித்து வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று அக்குடும்பத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் தனது குழந்தையுடன் 11வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள். இத்துயரச் சம்பவம் நடைபெற்ற போது அவரது கணவரும் வீட்டில் தான் இருந்துள்ளார். எனவே, சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப் பட்டுள்ளார். எனினும், இளம்பெண்ணும், அவரது குழந்தையும் பலியானது விபத்தா, கொலை முயற்சியா அல்லது இளம்பெண்னின் தற்கொலை முடிவா என்பது பிரேத பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே தெளிவாகும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:
Post a Comment