செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி முத்துப்பேட்டை பகுதி களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் ஐ.ஜி. ராமசுப் பிரமணியன் நேற்று ஆய்வு செய் தார்.
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதிகளில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. முத் துப்பேட்டை, ஆலங்காடு, ஜாம்புவான்ஓடை, செம் படவன்காடு, கோவிலூர், கீழ நம்மங்குறிச்சி உள்ளிட்ட 19 இடங்களில் விநாயகர் சிலை கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பாமணி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன. இதற் கான விநாயகர் ஊர்வலம் இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது.
19 சிலைகள்
ஊர்வலம் ஜாம்புவான் ஓடை வடகாடு சிவன் கோவி லில் இருந்து புறப்பட்டு தர்கா ரோடு, ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம், பட்டுக் கோட்டை சாலை, செம்பட வனகாடு சாலை ஆகிய இடங் கள் வழியாக பாமணி ஆற்று படித்துறைக்கு 19 விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. பின்னர் பாமணி ஆற்றில் சிலைகள் கரைக்கப்படு கின்றன.
ஊர்வலத்தையொட்டி முத்துப்பேட்டை பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. ஊர்வலம் நடைபெறும் இடங்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள் ளன.
12 இடங்களில் கேமரா
முத்துப்பேட்டை ஆசாத் நகர், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பெரிய கடைத்தெரு, ஏ.எம். பங்களா, பேட்டை, செம்படவன்காடு, மன்னார்குடி மெயின் சாலை உள்ளிட்ட 12 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 இடங்களில் நிரந் தரமாகவும், 6 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவிற் காகவும் கேமரா பொருத்தப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
ஊர்வலம் இன்று (செவ் வாய்க்கிழமை) நடைபெற உள்ள நிலையில் முத்துப் பேட்டை பகுதிகளில் செய்யப் பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு கள் தொடர்பாக நேற்று திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
நேற்று காலை 9 மணி அளவில் முத்துப்பேட்டைக்கு வருகை தந்த அவர் விநாயகர் ஊர்வலம் புறப்படும் இடமான ஜாம்புவான்ஓடை வடகாடு சிவன் கோவிலை பார்வையிட் டார். பின்னர் ஊர்வலம் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
பின்னர் போலீஸ் ஐ.ஜி. நிருபர்களிடம் கூறிய தாவது:-
பாதுகாப்பு ஏற்பாடுகள்
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை யொட்டி முத்துப்பேட்டை பகுதிகளில் அனைத்து இடங் களிலும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுவார்கள். கடந்த ஆண்டை போலவே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாது காப்பு ஏற்பாடுகளுக்கு தகுந் தாற்போல் தீ அணைப்பு வாக னங்கள், கலவர தடுப்பு வாக னங்கள் ஊர்வல பாதைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. காமி ராக்கள் மூலமாக ஊர்வலம் கண்காணிக்கப்படும். புலனாய்வு துறை போலீசார் முத்துப்பேட்டை பகுதிகளில் கண்காணிப்பு செய்து வருகி றார்கள். ஊர்வலம் அமைதி யாக நடைபெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஐ.ஜி. கூறினார்.
சூப்பிரண்டுகள்
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், வருவாய் அதி காரிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment