செப்டம்பர் 17 : இதுவரை விடியற்காலை 5:15 மணிக்கு துபாயிலிருந்து திருச்சிராப்பள்ளி வந்திறங்கி பின்பு காலை 8:20 மணிக்கு துபாய் சென்றடைந்தது.
15-09-2013முதல் இதற்கான நேரம் கீழ்கண்டவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மாலை 5:00 மணியளவில் துபாயிலிருந்து புறப்பட்டு இரவு 10:50 மணிக்கு திருச்சி வந்தடையும்.
பின்பு இரவு 12:50 மணிக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டு விடியற்காலை 3:35 மணிக்கு துபாய் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நேரம் மாற்றம் நமதூர் வாசிகளுக்கு ஏமாற்றமாகவும் அமைய வாய்ப்புள்ளது. இதுவரை அநேக நமதூர் வாசிகள் திருச்சிராப்பள்ளிக்கு எழிதில் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் உற்றார், உறவினர்களுடன் சென்று விமான நிலையத்திற்கு வழி அனுப்பி வைப்பதற்கும், அழைத்து வருவதற்கும் ஏதுவாக இருந்துவந்தது.. இனி இரவு பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.. விபத்துகள் இல்லா பயணமாக அமைய வாழ்த்துக்களும்,பிரார்த்தனைகளும்..
குறிப்பு : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மட்டுமே திருச்சி-துபாய்க்கு நேரடி சேவை வழங்கிக்கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment