முத்துப்பேட்டையில் நடந்து முடிந்து விநாயகர் ஊர்வலம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 17

முத்துப்பேட்டையில் நடந்து முடிந்து விநாயகர் ஊர்வலம்.




 







செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம்  இன்று  நடைபெற்றது. விநாயகர் சிலை முத்துப்பேட்டை, ஆலங்காடு, ஜாம்புவான்ஓடை, செம்படவன்காடு, கோவிலூர், கீழ நம்மங்குறிச்சி உள்ளிட்ட 19 இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பாமணி ஆற்றில் கரைக்கப்பட்டது. மாலை 4 மணியளவில் ஊர்வலம் ஜாம்புவான் ஓடை வடகாடு சிவன்கோவிலில் இருந்து புறப்பட்டு தர்கா ரோடு, ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ்நிலையம், பட்டுக்கோட்டை சாலை, செம்படவன்காடு சாலை ஆகிய இடங்கள் வழியாக பாமணி ஆற்றில் கரைக்கப்பட்டது.
மரைக்கா கோரையாறு பாலம் அருகே ஊர்வளம் வரும்போது மக்ரிப் தொழுகை பாங்கு சொல்லப்பட்டது. அதனால் பாலத்தில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் ஊர்வளம் புறப்பட்டுவந்தது. செம்படவன்காடு, கோவிலூர், கீழ நம்மங்குறிச்சி இருந்து கொண்டுவரப்பட்ட சிலைகள் பழைய பேருந்து நிலையத்தில் ஒன்றினைந்து கொண்டு ஆற்றில் கரைக்க எடுத்து செல்லப்பட்டது. இஷா தொழுகைக்கு முன்பாவே முத்துப்பேட்டை எல்லை கடந்து சென்றது.
ஊர்வளம் செல்லும் போது முத்துப்பேட்டையில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஊர்வளத்தில் கலந்துகொண்ட பலர் கலைந்து சென்றனர். கனமழை காரணமாக சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது.
ஊர்வலத்தையொட்டி முத்துப்பேட்டை பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடந்த ஆண்டை போலவே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஊர்வலம் நடைபெறும் இடங்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்கானிக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தகுந்தாற்போல் தீ அணைப்பு வாகனங்கள், கலவர தடுப்பு வாகனங்கள் ஊர்வல பாதைகளில் நிறுத்தப்பட்டது.
எந்த வித அசம்பாவிதமும் நடைபெறமல் முத்துப்பேட்டை மக்களுக்கு பாதுகாப்பு அளித்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
புகைப்படம்: முத்துப்பேட்டை நண்பர்கள்

1 comment:

  1. ஊர்வளம் செல்லும் போது முத்துப்பேட்டையில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஊர்வளத்தில் கலந்துகொண்ட பலர் கலைந்து சென்றனர். கனமழை காரணமாக சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது.

    ReplyDelete

Post Bottom Ad

Responsive Ads Here