ஆகஸ்ட் 11: ஈகைப் பெருநாள் தினத்தில் குஜராத்தின் அஹ்மதாபாத் நகரில் உள்ள ஹிமாலயா ஷாப்பிங் மாலில் முஸ்லிம்கள் நுழைய அதிகாரிகள் கட்டணம் வசூலித்துள்ளனர்.
மாலுக்குள் நுழைய ரூ.20 முஸ்லிம்களிடம் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் பொருள் வாங்கினால் நுழைவுக் கட்டணம் திரும்ப அளிக்கப்படும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
மாலுக்கு குடும்பத்துடன் சென்ற டெல்லியைச் சார்ந்த செய்யத் ஷேக் கூறுகையில், ‘மாலுக்கு வருகை தந்தவர்களை மொத்தமாக தடுத்து நிறுத்தி முஸ்லிம்களை மட்டும் தனியாக மாற்றி நிறுத்தினர்’ என்று கூறுகிறார்.
நெரிசல் மிகுந்த நாட்களில் மாலுக்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதில் தவறில்லை என்றாலும், முஸ்லிம்களை மட்டும் தனியாக மாற்றி நிறுத்தியது சரியல்ல என்று மாலுக்குச் சென்ற ஷாஹ்பூரைச் சார்ந்த இல்யாஸ் அன்சாரி கூறுகிறார்.
No comments:
Post a Comment