பிப்ரவரி 12: முத்துப்பேட்டையில் கடந்த 23 ஆண்டுகளாய் தொடர்ந்து நடைபெற்று வரும் புகாரி ஷரீபு மஜ்லிஸ், இந்த ஆண்டிற்கான மஜ்லிஸ் 14.01.2013 ரபியுல்அவ்வல் பிறை 1 ல் துவக்கப்பட்டு அதன் நிறைவு விழா ரபியுல் ஆகிர் பிறை 1 (12.02.2013) செவ்வாய்க்கிழமை அரபு சாஹிப் பள்ளி மதரஸா வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
காலை 8.30 மணிக்கு திருக்குர் ஆன், ஓதப்பட்டு, 9.30 மணிக்கு ஹதீஸ் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழில் சிறப்பு பயானை ஹாஜி. இப்தான்லுல்லாஹ் – சேலம் – மௌலானா ஹஜ் சர்வீஸ் அவர்கள் உரையாற்றியாற்றியபோது, முத்துப்பேட்டையில் புகாரி ஷரீபு மஜ்லிஸ் துவக்கப்பட்டு அதனின் நிறைவு நாள் இன்றாக உள்ளது. இந்த ஒரு மாத காலத்தில் இந்த ஊர் மக்கள் பல நல்ல விஷயங்களை கேட்டு அறிந்து உள்ளீர்கள். அதனை வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென்ற நிய்யத் நாம் எல்லோருக்கும் வேண்டும் என்றார். கல்வியால் நாம் முன்னேற்றம் அடையலாம் என்று நினைக்கிறோம். அந்த கல்வி சிறந்த கல்வியாக இருந்தால் மட்டுமே அதற்குரிய சிறப்பு கிடைக்கும். இப்போது உள்ள கல்விகள் அனைத்தும் கல்வியாக இல்லாமல் வேறும் கலையாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்கள்.
அதிரை ஹாஜி. அப்துல் லத்தீப் ஆலிம்ஷா அவர்களின் உரையின் சில பகுதிகள்..’தூய எண்ணத்துடன் ஒரு மனிதன் ஒரு காரியத்தை எண்ண நாடினால் எல்லாம் வல்ல இறைவன் அதற்கு துணை புரிவான். எண்ணங்களுக்கு ஏற்ற கூலி கிடைக்கும் எது பாவம்..எது நல்லது என்று நாம் அறிந்து செயல்பட வேண்டும் அதற்கு தீன் என்ற இஸ்லாத்தை புரிந்து நாம் வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும். குறிப்பாக பெண்கள் பாவங்கள் செய்வதிலிருந்து அவர்களை அல்லாஹ_தலா பாதுகாக்க வேண்டும். ஏனெனில் நரகத்தில் அதிகமான பெண்களை கண்டதாக நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். தீன் என்ற இஸ்லாத்தின் படி நமது பிள்ளைகளை வளர்க்க கூடிய கடமை பெற்றோர்களாகிய நமக்கு உண்டு என்று ஹாஜி அவர்கள் தமது உரையில் கூறினார்கள்.
குறிப்பு : புகாரி ஷரீபு மஜ்லிஸ் – நிறைவு விழா நிகழ்ச்சிக்குப்பின், முத்துப்பேட்டை மதரஸத்து தர்பியத்துல் பனாத் பெண்கள் மதரஸாவில் 3 ஆண்டுகள் பாடத்திட்டத்தின் கீழ் மார்க்கக் கல்வி பயின்று பூர்த்தி செய்து தேர்வு பெற்ற 3 மாணவிகளுக்கு ‘ஸனது” சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
NEWS PARTNER: முத்துப்பேட்டை.org
No comments:
Post a Comment