பிப்ரவரி 12: காரைக்கால் நகரைச் சேர்ந்த வினோதினி. சென்னை சைதாப்பேட்டையில் தங்கி இருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ் தனது காதலை ஏற்க மறுத்த வினோதினி மீது கடந்த நவம்பர் மாதம் ஆசிட் வீசினார்.
இதில் வினோதினியின் முகம் மற்றும் உடலில் பல பகுதிகள் கருகிப்போனது. முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோதினியின் மீது நேரடியாக ஆசிட் வீசப்பட்டதால் அவரது இரு கண்களும் எரிந்து பார்வை பறிபோய் விட்டது.
கண் பார்வை பறிபோன நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் கடந்த சில மாதங்களாக வினோதினி சிகிச்சை பெற்று வந்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை வினோதினி உயிரிழந்தார்.
No comments:
Post a Comment