மறையப்போகும் CD, DVD-க்கள்,அதை பற்றி சிறிய தகவல் !! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 19

மறையப்போகும் CD, DVD-க்கள்,அதை பற்றி சிறிய தகவல் !!





செப்டம்பர் 19: கம்ப்யூட்டர் மார்க்கட்டில் இருந்து சிடி மற்றும் டிவிடிக்கள் மறையும் காலம் வந்துவிட்டது. பிளாப்பி டிஸ்க்குகளைப் போல இவையும் காணமால் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
ஒரு காலத்தில், 1985க்கு முன்னர், +2 சயின்ஸ் லேப் பிராக்டிகல் ரெகார்ட் அளவிலான டிஸ்க்குகள் பயன்பாட்டில் இருந்தனவயாம். துளையிடப்பட்டு பயன்படுத்தப் பட்டு வந்த கார்டுகளுக்குப் பதிலாக இவை பயன்பாட்டில் இருந்தனவையாம்..
இவற்றை ஐந்தே கால் அங்குல அகல அளவிலான டிஸ்க்குகள் வெளியேற்றின. இதன் கொள்ளளவு KB அளவிலேயே இருந்தன. அடுத்து வந்த சிறிய பிளாப்பி டிஸ்க்குகள் 1.44 MB அளவு டேட்டாவைக் கொள்ளும் அளவில் இருந்தன.
பின்னர் அதிக அளவில் கொள்ளளவு கொண்டிருந்த Zip டிரைவ்கள் ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. CD அதன் பின் DVD வந்த பின்னர், Floppy டிஸ்க்குகள் மறைந்து, அதற்கான ட்ரைவினை கம்ப்யூட்டரில் காண்பது அரிதாக உள்ளது.
இப்போது Flash ட்ரைவ், External ட்ரைவ் வந்த பின்னர், DVD ட்ரைவ் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில், தற்போது வந்து கொண்டிருக்கும் MAC கம்ப்யூட்டர்களில் DVD ட்ரைவ் பொருத்தப்படுவதில்லை..
பெர்சனல் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும், டிவிடி ட்ரைவ் ஒரு விருப்பத் தேர்வாக அமைக்கப்பட்டு, தனியே வாங்கிப் பயன்படுத்தும் வகையில் உள்ளன. விரைவில் டிவிடிக்களும் சிடிக்களும் காணாமல் போய்விடும் என்றேஅனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதற்கான முக்கிய காரணங்கள் ஆறினை இங்கு பார்க்கலாம்.

1. சத்தம் : சிடி மற்றும் டிவிடி ட்ரைவ்கள் இயக்கத்தின் போது, உள்ளே சுழலும் மற்றும் நகரும் பாகங்கள் இயங்குவதால், தேவையற்ற சத்தம் ஏற்படுகிறது. எக்ஸ் பாக்ஸ் 360 போன்ற சாதனங்களில் இந்த சத்தம் சற்று அதிகமாகவே உள்ளது.

2. பராமரிப்பு : அதிக வேகத்தில் சிடிக்களைச் சுழற்றி, லேசர் கதிர்கள், அவற்றைப் படிக்கையில், தூசு சேர்ந்து அவையும் சுழற்சியில் பங்கேற்கின்றன. இவை சேராமல் இருக்க இதனை நாம் பராமரிக்க வேண்டியுள்ளது. மேலும், விரைவில் தங்கள் பயன் நாட்களை இழந்திடும் கம்ப்யூட்டரின் துணை சாதனமாக, சிடி ட்ரைவ் உள்ளது.

3. இயக்க சக்தி : மிக அதிக வேகத்தில் டிவிடிக்களை சுழற்ற வேண்டிய நிலையில், அதற்கான மின் சக்தியும் சற்று அதிகமாகவே செலவாகிறது. இதனால் லேப்டாப் போன்ற கம்ப்யூட்டர்களில் பிரச்னை ஏற்படுகிறது.

4. வேகம் : சிடி அல்லது டிவிடியிலிருந்து டேட்டா படிக்கப்படுகையில், அதிக வேகத்தில் அவை சுழல்கின்றன. இதே நிலை ஹார்ட் டிஸ்க் அல்லது சாலிட் ஸ்டேட் டிஸ்க்கில் ஏற்பட்டாலும், சுழல் வேகம் குறைவாகவே உள்ளது. அதிக வேகத்தில் டிவிடி சுழன்றாலும், தகவல் அனுப்பிப் பெறும் விஷயத்தில், ஹார்ட் டிஸ்க் மற்றும் பிறவற்றிலிருந்து தகவல்களைப் பெறுவதே அதிக வேகத்தில் நடைபெறுகிறது.

5. மீடியா : இந்த ஒரு விஷயத்தில் தான், பலரும் சிடி, டிவிடிக்கள் காணாமல் போவதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. முதலாவதாக, டிஸ்க்குகள் அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றன. பல மாதங்கள் கழித்து, நாம் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால், அந்த குறிப்பிட்ட சாப்ட்வேர் உள்ள சிடி அல்லது டிவிடி எங்கே உள்ளது என்று பல சிடிகளுக்கிடையே தேட வேண்டியுள்ளது.
பயன்படுத்தாமல் பல காலம் இருந்தாலும், அதில் ஸ்கிராட்ச் எதுவும் இல்லாமல், ஈரப்பதத்தினால், மேலாகப் பங்கஸ் பூச்சு எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் இந்த பிரச்னைகளுக்காக ஹார்ட் டிஸ்க்கினை ஒப்பிட்டுப் பார்த்தால், விலை குறைவு, அளவிற்கு எல்லை இல்லை மற்றும் தேடிப் பார்த்து அறிவது மிக எளிது.

6. வசதி : இணையம் இப்போது நமக்கு எல்லாவிதத்திலும் உதவுகிறது. பைல்களை ஸ்டோர் செய்து எப்போது வேண்டு மானாலும் அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். பல வேளைகளில் கட்டணம் எதுவுமின்றி இந்த சேவை கிடைக்கிறது.

மேற்கண்ட காரணங்களினால், நிச்சயம் சிடி, டிவிடிக்களின் பயன்பாடு விரைவில் இல்லாமல் போகும். என்ன சரிதானே??

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here