ஜுலை 09: ஐக்கிய அரபு அமீரக(யு.ஏ.இ) சிறைகளில் பெண்கள் உள்பட 1200 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய தூதர் எம்.கே.லோகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கொலை, திருட்டு, பொருளாதார மோசடிகள் போன்ற குற்றங்களுக்காக இவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூதரக அதிகாரிகள் தொடர்ந்து சிறைகளில் சென்று புள்ளி விபரங்களை புதுப்பித்து வருவதாகவும் லோகேஷ் குமார் கூறினார்.
மேலும் அவர் கூறியது: ஐக்கிய அரபு அமீரக சட்டங்களை மதித்து நடக்கவேண்டும். திரும்ப அடைக்க முடியாவிட்டால் கடன் வாங்காதீர்கள் என இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கம்யூனிட்டி வெல்ஃபெயர் நிதியில் இருந்து சிறிய தொகை மட்டுமே கொடுத்து உதவ முடியும். யு.ஏ.இயில் இந்தியர்களின் தற்கொலை எண்ணத்தை போக்க 70 விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும்.
கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு வாரமும் ஒரு இந்தியர் தற்கொலைச் செய்துள்ளார். இத்தகைய தற்கொலைகளின் முக்கிய காரணமே பொருளாதார நெருக்கடி ஆகும்.
சாதாரண மக்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள ஒவ்வொரு மாதமும் அபுதாபியில் இந்திய தூதரகத்திலும், துபாயில் இந்திய துணை தூதரகத்திலும் ஓபன் டே நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு லோகேஷ் கூறினார்.
No comments:
Post a Comment