ஜூடோ வீராங்கனை பர்தா அணிய அனுமதி மறுத்தால் ஒலிம்பிக்கை புறக்கணிப்போம்! சவுதி அரேபியா அறிவிப்பு. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 29

ஜூடோ வீராங்கனை பர்தா அணிய அனுமதி மறுத்தால் ஒலிம்பிக்கை புறக்கணிப்போம்! சவுதி அரேபியா அறிவிப்பு.



ஜூலை. 29: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சவுதி அரேபியா வீரர்-வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இதில் மகளிர் ஜூடோ போட்டி யில் மோதும் சவுதி வீராங்கனைகள் முஸ்லிம் மத வழக்கப்படி பர்தா அணிய அனுமதிக்க வேண்டும் என்று சவுதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளது. 

இதையடுத்து லண்டனில் நேற்று முன்தினம் சர்வதேச ஜூடோ பெடரேஷன் ஆலோசனை கூட்டம் தலைவர் மரியஸ் வியெர் தலைமையில் நடந்தது. அதில் பர்தா அணிவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. 

ஜூடோ வீராங்கனை தனது தலையில் முககவசம் போல் உடை அணிந்து மோதுவது கடினம். மேலும் அது பாதுகாப்பானதும் அல்ல, ஜூடோ போட்டி முறைக்கு எதிரானது என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. ஜூடோ போட்டியில் வீராங்கனைகள் மோதிக் கொள்ளும் போது தலையை மறைக்கும் விதமாக பர்தா அணிந்து இருந்தால் ஆபத்து விளைவிக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் சவுதி ஆரேபியா பிரதிநிதி கூறுகையில்:

எங்கள் நாட்டு வழக்கப்படி தலையில் பர்தா அணிய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆசிய ஜூடோ பெடரேசன் அமைப்பானது முஸ்லிம் பெண்கள் தலையில் பர்தா அணிய அனுமதித்துள்ளது. எனவே சர்வதேச ஜூடோ பெடரேசனும் அனுமதிக்க வேண்டும். அனுமதி மறுத்தால் ஒலிம்பிக் போட்டியையே புறக்கணிப்போம் என்று சவுதிஅரேபியா மிரட்டல் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here