ஜுலை 29: பிரேசிலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரேசிலின் ரியோடி ஜெனீரா நகரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.
பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட பிரேசில் சமூகம் இஸ்லாத்தின் பால் கவரப்படுவதற்கோ, இஸ்லாத்தின் சின்னங்களை அணிவதற்கோ எவ்வித தடைகளையும் விதிப்பதில்லை என இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இளம்பெண் ஃபாத்திமா கூறுகிறார்.
2000-ஆம் ஆண்டு சூழ்நிலை புள்ளிவிபரப்படி 27,239 முஸ்லிம்கள் பிரேசிலில் வசித்தார்கள். தற்பொழுது பிரேசிலில் இத்திஹாதுல் இஸ்லாமியாவின் புதிய ஆய்வின் படி முஸ்லிம் மக்கள் தொகை பதினைந்து லட்சமாக அதிகரித்துள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் ரியோடி ஜெனீராவில் 500 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களில் 85 சதவீதமும் பிரேசிலை சார்ந்தவர்கள் ஆவர்.
ஃபலஸ்தீன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளைச் சார்ந்த ஏராளமானோர் பிரேசிலில் வசிக்கின்றனர்.
No comments:
Post a Comment