ஜுலை 16 :குழந்தைகளின் அறிவுத்திறனை நாம் வெளிக்கொணர வேண்டும். அவர்களுக்குள் எத்தனையோ திறமைகள், ஏதோ ஒன்றினை பற்றி அறிவுப்பூர்வமாக சிந்திக்க கூடியவர்கள். அவர்களின் அறிவுத்திறனுக்கு ஒரு சவாலாக இன்று காலை 10.30 மணியளவில் துவங்கி 12.15 மணி வரை முத்துப்பேட்டை – புதுப்பள்ளியில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்ட ”பட்டி மன்ற நிகழ்ச்சி” மிக சிறப்பாக நடைபெற்றது.
பட்டி மன்ற தலைப்பு : குழந்தைகள் முன்னேற பெரிதும் காரணமாக இருப்பவர்கள் ”ஆசிரியர்களா..? பெற்றோர்களா..?”
”பெற்றோர்களே” என்ற தலைப்பில்
1. M. அபுபக்கர் சித்திக் – (த.பெயர்) – M. முஹமது தஸ்தகீர் – புதுத்தெரு 2
2. N. முஹம்மது ஆஷிக் – (த.பெயர்) – A. நூர் முஹம்மது – பேங்க் தெரு
3. S. பாரிஸ் அஹமது – (த.பெயர்) – M. சம்சுதீன் – கொய்யா மஹால் அருகில்
”ஆசிரியர்களே” என்ற தலைப்பில்
1. M. ரிபாயா நிஷா – (த.பெயர்) A. முகம்மது தாவூது – கொய்யா மஹால் அருகில்
2. J. பைசல் – (த.பெயர்) ஜெகபர்தீன் – ரோடு
3. F. முஹம்மது தாமர் (த.பெயர்) M. பசூலுல் ரஹ்மான் – புதுத்தெரு 2
மாணவ, மாணவிகள் தங்களின் வாத திறமையினை மிக அழகாகவும், தௌ;ளத்தெளிவாக எடுத்துரைத்தனர். போட்டியின் நடுவராக குத்பா பள்ளி வாசல் இமாம் மௌலவி அஹமது ஜலாலுதீன் ரஷாதி அவர்கள் குழந்தைகள் முன்னேற பெரிதும் காரணமாக இருப்பவர்கள் ”பெற்றோர்கள்” என்று இறுதி தீர்ப்பினை வழங்கினார்கள்.
இப்பட்டிமன்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவ செல்வங்களுக்கும் புதுப்பள்ளி வாசல் நிர்வாகக்கமிட்டி சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து முஹல்லாவாசிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். புதுப்பள்ளி வாசல் இமாம். மௌலவி. கே. சவுகத் அலி – மழாஹிரி கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றியுரையினை தெரிவித்துக்கொண்டார்கள்.
தகவல் : முத்துப்பேட்டை.org
No comments:
Post a Comment