ஜுன் 24: தற்போது பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமானால் முதலில் ஆன்லைனில் அப்பாயின்மென்ட் வாங்கிக்கொண்டு பிறகு பாஸ்போர்ட் சேவா கேந்திரம் என்ற சேவை மையங்களில் அவர்கள் குறிப்பிடும் நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு சென்று நம்முடைய சான்றிதழ்களை கொடுக்க வேண்டும் .
இவ்வாறு குறிப்பிட்ட நாளில் சரியான நேரத்திற்கு சென்றால் கூட அங்கு நாம் மூன்று மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வரை காத்திருக்கவேண்டும்.பின்பு அங்குள்ள அதிகாரியிடம் நம் விண்ணப்பத்தையும் ,ஆன்லைனில் அவர்கள் கேட்ட தகவல் சான்றிதழ்களையும் அளிப்போம்.
அவர்கள் அதை சரிபார்த்துவிட்டு இது சரிஇல்லை அந்த டாகுமென்ட் வேண்டும் என்று நம்மை திருப்பி அனுப்பி இன்னொரு நாளில் நம்மை வரவேண்டும் என்பார்.
நாம் நெட்டில் குறிப்பிட்டிருந்த எல்லா டாகுமெண்ட்களையும் எடுத்து சென்றாலும் இந்த நிலைதான் .ஏனெனில் நெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேவையான ஆவணங்கள் பட்டியலில் சரியான படி அறிவிப்புகள் இல்லை.
அடுத்து குடும்பத்தினர் அனைவருக்கும் விண்ணப்பிக்கவும் முடியாது ஒவ்வொருவராக த்தான் அப்பாயின்மெண்ட் பெற்றுக்கொண்டு செல்ல வேண்டிய நிலை.
இங்குதான் இடைத்தரகர்கள் பலக் புக்கிங் செய்து தருவதாகக்கூறி தட்கல் தொகையை விட அதிக பணத்தை கறந்து விடுவர்.
சரி இந்த பிரச்சனையெல்லாம் வேண்டாம் தட்கலில் 2500 ரூபாய் கட்டி விண்ணப்பிக்கலாம் என்று போனாலும் இதே நிலைதான் நாட்டின் எல்லா பாஸ்போர்ட் ஆபிஸ் மற்றும் சேவா கேந்த்ரங்களிலும்.
இதைப்பற்றிய பல்வேறு புகார்கள் பல மட்டங்களை அடைந்தபிறகு தற்போது விழித்துக்கொண்டு இருக்கிறது பாஸ்போர்ட் டிபார்ட்மென்ட்.
இன்று முதல் பாஸ்போர்ட் கேந்த்ரங்களில் மேலும் 500 ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட்கள் வழங்கப்படும்.
குடும்ப உறுப்பினர்கள் மொத்தமாக ஒரே நாள் ,நேரத்தில் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்படும்.
தேவைப்படும் டாகுமென்ட் பற்றிய தெளிவான மாற்றி அமைக்கபப்ட்ட பட்டியல் ஆன்லைனில் அப்டேட் செய்யப்படும்.
தட்கல் விண்ணப்பதாரர்களுக்கு தனியாக ஒரு அலுவலகம் திறக்கப்படும்.
எல்லா பாஸ்போர்ட் சேவை மையங்களிலும் கூடுதலாக அதிகாரிகள் நம் கேள்விகளுக்கு விடை அளிக்க நியமிக்கப்படுவார்கள்.
புரோக்கர்களின் தலையீட்டை முற்றிலும் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
அஞ்சலகங்களில் சிறிய தொகை செலுத்தி ஆன்லைன் அப்பாயின்ட்மென்ட் புக் செய்துகொள்ளும் முறை படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவரப்படும். .
எனவே பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் என்பது இனி சுலபமானதாக அமையும் என்று பாஸ்போர்ட் மற்றும் விசா துறை கூடுதல் செயலாளர் பசந்த்.கே. குப்தா தெரிவித்துள்ளார்.
For any queries and suggestions, you can contact Passport Seva Call Centre atTel No.1800-258-1800 (Toll Free).
சென்னை, தஞ்சாவூர், திருச்சி-யில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களின்முகவரி.
1. Passport Seva Kendra
Ground & First Floor,
No.1, Bhanumathi Ramakrishna Road,
Saligramam, (Vadapalani) Chennai – 600 093.
2. Passport Seva Kendra
First Floor, Navins Presidium,
No.103, Nelson Manickam Road,
Aminjikarai, Chennai – 600 029.
3. Passport Seva Kendra
Ground & First Floor,
Claret Complex, Old No.4a & 4b,
New No. 17& 19, Duraisamy Reddy St.
Tambaram, Chennai – 600 045.
4. PSK Thanjavur – New No. 201/7D, Old No. 201/7, Medical College Road, Next to Kumaran Cinema Theatre, Thanjavur.
5. PSK Trichy – Plot No. A5, Salai Road & Shastri Road Junction, Thillai Nagar, Trichy.
No comments:
Post a Comment