ஜுன் 10: முஸ்லிம் இளைஞர்களை பிடித்துச்செல்வது, கொலைச்செய்வது ஆகியவற்றிற்கு மத்திய உள்துறை அமைச்சகமும், ஐ.பியும் காரணமாக கூறும் இந்திய முஜாஹிதீன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவராத் அமைப்பின் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுத்தொடர்பாக முஷாவராத் தலைவர்கள் கூறியது:
நேற்று முன்தினம் புனே சிறையில் இளைஞர் கொலைச்செய்யப்பட்டதுக் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படவேண்டும்.மஹராஷ்ட்ரா உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள சி.ஐ.டி விசாரணையில் நம்பிக்கை இல்லை. மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா, என்.ஐ.ஏ சீஃப் சரத் சந்திர சின்ஹா, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கத்தீல் கொலையில் பொறுப்பாளிகள் ஆவர். கொடூரமான சித்திரவதைக்கு ஆளான கத்தீலின் மீது போலீசும், ஏ.டி.எஸ்ஸும் சுமத்திய வழக்குகள் ஒன்றும் செல்லுபடியாகாது என்பது புலனாய்வு ஏஜன்சிகளுக்கு தெரியும்.
கைதுச்செய்து ஏழு மாதங்கள் கழிந்தபிறகும் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க புலனாய்வு ஏஜன்சிகளுக்கு இயலாததே இதற்கு ஆதாரமாகும். சித்திரவதைச்செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெற முயற்சித்த விபரத்தை நீதிமன்றத்தில் கத்தீல் கூற சாத்தியம் உண்டு என்பதை உணர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகளை பயன்படுத்தி கத்தீலை கொலைச் செய்யதுள்ளதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.இவ்வாறு முஷாவராத் தலைவர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் முஷாவராத் தலைவர் ஸஃபருல் இஸ்லாம் கான், மஹ்தாப் ஆலம், டாக்டர்.எஸ்.க்யூ.ஆர்.இல்யாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment