ஜூலை 1 முதல் புதிய ரெயில்வே கால அட்டவணை வெளியிடப்படுகிறது. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 9

ஜூலை 1 முதல் புதிய ரெயில்வே கால அட்டவணை வெளியிடப்படுகிறது.



ஜூன். 9: ரெயில்வே கால அட்டவணை ஜூலை 1-ந் தேதியை மையமாக வைத்து ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான புதிய கால அட்டவணை 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. இந்த புதிய கால அட்ட வணையில் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய ரெயில்கள் எப்போது விடுவது குறித்த தகவல் இடம் பெறும்.

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட புதிய ரெயில்கள் இயக்கப்படுவது குறித்த விவரங்கள், நீட்டிப்பு செய்யக்கூடிய ரெயில்கள், வாரம் இருமுறை, வாராந்திர ரெயில்கள், தினசரி ரெயிலாக மாற்றம் செய்வது குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

மேலும் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரமும் மாற்றம் செய்யப்படுகிறது. புதிய ரெயில்கள் விட இருப்பதால் ஏற்கனவே உள்ள எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாறுகிறது. புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம், சில முக்கிய ரெயில்களின் வேகம் அதிகரிக்கவும் செய்யப்படுகிறது. கால அட்டவணையில் பயணிகளுக்கு பயன்படும் முக்கிய தகவல் அடங்கியுள்ளன.

ரெயில்வே ரூட் வரை படம், தெற்கு ரெயில்வே, தென் மத்திய, தென் மேற்கு ஆகிய ரெயில் சேவைகள் பற்றிய விவரமும் கொடுக்கப்பட்டு இருக்கும். விசாரணை மற்றும் தகவல் மைய டெலிபோன்கள், டிக்கெட் பணம் திருப்ப பெறுதல், இழப்பீட்டு தொகை, முன்பதிவு செய்யும் வசதிகள், பயண சலுகை பெறும் வழிமுறைகள் இதில் இடம் பெறும்.

இது தவிர புகார் தெரிவிக்க விஜிலென்ஸ் ஆபிஸ் டெலிபோன் எண்களும் தரப்பட்டு இருக்கும். புதியதாக வெளியிடப்படும் தெற்கு ரெயில்வே கால அட்ட வணையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here