செப்டம்பர் 13: முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முயன்றதால் தமாகா பிரமுகருக்கு அரிவாள் வெட்டு.
முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முயன்றதால் தமாகா பிரமுகரை அரிவாள் வெட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முத்துப்பேட்டை அருகேயுள்ள தில்லைவிளாகம் அறமங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம்(40). இவர் தமாகா மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவரது மனைவி புனிதா. இவர் முத்துப்பேட்டை ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் பாலசுந்தரம் கடந்த 11ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது கதவு தட்டும் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த அவரை 4 பேர் கொண்ட ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த பாலசுந்தரம் வீட்டுக்குள் ஓடி ஒளிந்தார். சத்தம் கேட்ட எழுந்த குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் கூட்டமாக கூடியதால் கும்பல் தப்பி ஓடியது. இதில் உயிருக்கு போராடிய பாலசுந்தரம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக் டர் ராஜ்குமார். இதில் பாலசுந்தரத்தை வெட்டிய தில்லைவிளாகம் அருண், தினேஷ் ஆகிய இருவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி அவர்களை வருகிறார்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கக்கன் அமைச்சராக இருந்த போது இப்பகுதி தியாகிகளுக்கு வழங்கிய சாகுபடி நிலங்களை இப்பகுதி தனியார் ஒருவரின் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அதனை மீட்கும் பணியில் பாலசுந்தரம் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

No comments:
Post a Comment