மக்கா விபத்து 9 இந்தியர்கள் உட்பட 107 பேர் பலி , 230 பேர் படுகாயம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, September 12

மக்கா விபத்து 9 இந்தியர்கள் உட்பட 107 பேர் பலி , 230 பேர் படுகாயம்.







செப்டம்பர் 12: முஸ்லிம்களின் புனித நகரமான மக்காவில் நேற்று பலத்த காற்றின் மூலம் ஏற்பட்ட விபத்தில் உலகம் முழுவதும் இருந்து ஹஜ்ஜிற்கு வந்திருந்த யாத்ரீகர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்.

சவூதி அரேபியாவின் மக்காவில் உள்ள முஸ்லிம்களின் புனித ஸ்தலமான காஃபத்துல்லாஹ் பள்ளிவாசலின் மீது ராட்சத கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்ததில் 107 பேர் துடிதுடித்து பலியாகினர். 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 9 பேர் இந்தியாவிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்கள் என்றும், அவர்களை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர விபத்து குறித்து அங்குள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், “மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாசலை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், நேற்று மாலை மசூதியை சுற்றிலும் ஏராளமான ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகைக்காக ஏராளமானோர் வந்திருந்தனர்.

அந்த நேரம், பலத்த இடியுடன் மழையும் வலுத்து பெய்து கொண்டிருந்ததால் அனைவரும் ஒரே இடத்தில் திரண்டிருந்தனர். அப்போது மூன்றாவது தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சரிந்து மசூதியின் கூரையை உடைத்துக் கொண்டு அங்கிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 107 பேர் துடிதுடித்து பலியாகினர். காயமடைந்த 238 பேர் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

விபத்துக்கு முன்னதாக கிரேன் இருக்கும் இடத்தில் மின்னல் தாக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. எதிர்பாராத இந்த கொடூர விபத்தால் மசூதியே ரத்த வெள்ளமாகக் காட்சியளித்தது. இந்த விபத்து குறித்து சவுதி அரசு தீவிர விசாரணை நடத்தி வருகின்றது. அதே வேளையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனால், மீட்புப்பணி அசுரவேகத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த மாத இறுதியில் ஹஜ் புனித யாத்திரை தொடங்க உள்ளது. லட்சக்கணக்கானோர் அதில் பங்கேற்க உள்ள நிலையில், மக்காவில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது உலகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here