ஜுன் 21: முத்துப்பேட்டையில் கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள் !
முத்துப்பேட்டை கிட்டங்கி தெரு பகுதியை சேர்ந்தவர் ஹபீப் முஹம்மது. இவரது வீட்டின் கொல்லைப்புறத்தின் வழியாக அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று நுழைந்தது அங்குள்ள கிணற்றின் மீது ஏறி மரத்தில் உள்ள இழையை பறித்து தின்றபோது எதிர்பாரதவிதமாக கிணற்றின் உள்ளே தவறி விழுந்தது. உடனே சப்தம் கேட்ட வீட்டில் உள்ளவர்கள் கிணற்றில் உயிருக்கு போராடி வரும் ஆட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஆட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர்.
சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை 'சமூக ஆர்வலர்' KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா) தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு வீர்கள் கிணற்றில் உயிருக்கு போராடிவரும் ஆட்டை பத்திரமாக மீட்டனர். உடனே அருகில் நின்றவர்கள் தீயணைப்பு வீரர்களின் துரித செயலுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர். மேலும் மிகச்சரியான நேரத்தில் தீயணைப்பு நிலையத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்ற KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா) அவர்களுக்கும் நன்றி தெரிவித்து பாராட்டினர்.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)





No comments:
Post a Comment