மே 27: முத்துப் பேட்டை அடுத்த செம்படவன்காடு பந்தலடித் திடல் பகுதியை சேர்ந்த பக்கிரி சாமி மனைவி காத்தம்மாள் (70).
இவர் நேற்று பெரிய கடைத் தெரு சென்று விட்டு முகைதீன் பள்ளிவாசல் அருகே வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் மூதாட்டி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே காத்தம்மாள் இறந்தார்.
தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவர் முகைதீன் பள்ளி தெருவை சேர்ந்த ராஜ்முகம்மது என்பவரை கைது செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்


No comments:
Post a Comment