ஏப்ரல் 26: முஸ்லிம்கள் தனது நிக்காஹ் எனும் திருமணத்தை பதிவு செய்வது எப்படி? நம் ஊரில் தற்போது பல திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஆனால் பலர் அவர்களின் திருமணத்தை பதிவு செய்வது இல்லை. காரணம் விழிப்புணர்வு இல்லாமை. சிலர் அதான் பள்ளிவாசல் தப்தரில் பதிவு செய்து விட்டோமே, பிறகு எதற்கு மீண்டும் ஒரு பதிவு என்று வினவுவதும் உண்டு. உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பல மாநிலங்கள் கட்டாய திருமண பதிவு சட்டத்தை கொண்டு வந்துள்ளன. நம் தமிழ்நாட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது. நம் அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
என்ன காரணம்:-
நம் நாட்டில் பல பெண்கள் திருமணம் என்ற போர்வையால் நாசம் செய்யப்பட்டு, குழந்தைகளை பெற்றுக்கொண்டும், துன்பங்கள் அனுபவித்துக்கொண்டும், இறுதியில் அம்போ என்று நடுதெருவில் விடப்படுகிறார்கள். இது மாதிரியான வழக்குகள் நீதி மன்றங்களில் பல ஆயிரக்கணக்கில் குவிவதால் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாம்.
யார் யார் எல்லாம் பதிவு செய்யனும்:-
அனைத்து மதத்தவர்களும் கண்டிப்பாக பதிவு செய்யனும். சரி, கொஞ்சம் விரிவாக பார்ப்போம். 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 22 ஆம் தேதியிலிருந்து எந்த திருமணம் தமிழ் நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்ற சட்டங்களின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009 சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்தே ஆகனும்.
எங்கே பதிவு செய்வது?
உங்கள் திருமணம் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட இடத்தில் நடந்ததோ, அந்த அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். நமக்கு காவல்நிலையம் அருகில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யனும்.
எப்படி பதிவு செய்வது.?
திருமணத்தை பதிவு செய்ய தனியாக விண்ணப்பங்கள் உள்ளன. அதை சார் பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது தனியார் ஜெராக்ஸ் போன்ற நிறுவனத்திலோ பெற்றுக்கொள்ளலாம். கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து, அவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, அத்துடன் திருமணத்தைப் பதிவு செய்வதற்கான மனுவை இணைத்து கொடுக்கணும். மேலும் தேவையானவைகள். போட்டோட்டோக்கள் .5 + 5 * இருவருக்கும் அடையாள அத்தாட்சி காப்பி கொடுக்கணும் (உதாரணமாக பள்ளி டிசி குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வண்டி ஓட்டுனர் அட்டை போன்றவைகள்..) * கணவருக்கும், மனைவிக்கும் தனித்தனியாக ஒரு சாட்சிகள்.( தந்தை ஆக இருப்பது நலம்). இந்த சாட்சிகளுக்கும் அடையாள அத்தாட்சி காப்பி இணைக்கனும். திருமணம் நடந்து முடிந்த பள்ளிவாசலில் இருந்து திருமண சான்றிதல். குறிப்பாக மணமக்கள், ஆலிம் அவர்கள், சாட்சிகள் கையழுத்து போட்ட தப்தர் பக்கம் இருப்பது மிகவும் சிறந்தது. ( சில சமயம் இந்த கையழுத்து பக்கம் இல்லை என்றால், பள்ளிவாசலில் கொடுக்கும் திருமண சான்றிதழை நோட்டரி பப்ளிக் அவர்களிடம் அட்டெஸ்ட் வாங்கனும்). ஆக, அனைத்து சான்றிதல்களையும் காப்பி எடுத்து, அதை உரிய அரசாங்க அதிகாரியிடம் அட்டெஸ்ட் பண்ணனும்.
மேலும், திருமணத்துக்காக வரதட்சணை எதுவும் கேட்கப்படவில்லை, கொடுக்கப்படவில்லை, வாங்கப்படவில்லை என்றும் (இந்த விவரம் படிவத்திலேயே காணப்படுகிறது) உறுதி அளிக்க வேண்டும். ஆக மொத்தம் அனைத்து படிவங்கள், அட்டெஸ்ட் பண்ணப்பட்ட சான்றிதழ்கள், மணமக்கள், இரு சாட்சிகள் ஆகியவைகள் ரெடி தானே.. வாங்க செல்லுவோம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு. அனைத்தையும் சார் பதிவாளர் அவர்களிடம் கொடுத்து விபரம் கூறவும். திருமணம் நடைபெற்ற தேதியிலிருந்து 90 நாள்களுக்குள், திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கான கட்டணம் 100 ரூபாய். 90 நாட்களுக்குள் பதிவு செய்தால் 3 நாட்களுக்குள் பணிகள் நிறைவு பெற்று விடும்• 90 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாதவர்கள், அடுத்த 60 நாள்களுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி (ரூபாய் 150), பதிவு செய்து கொள்ள வேண்டும். OK…
நீங்கள் பதிவு செய்ய செல்லும்போது உங்களுடைய ஒரிஜினல் அடையாள அட்டையை கொண்டு செல்லனும். ஐயா அவர்கள் சரி பார்ப்பார்கள். உங்களின் அனைத்து விபரங்களும் சரிபார்க்கப்பட்டு, கையழுத்து, கைநாட்டு வாங்கப்பட்டு விடும் .
150 நாட்களுக்கு மேல் திருமணத்தை பதிவு செய்ய தவறினால் ஸ்பெசன் ஆக்டின் கீழ் வந்து விடும், மேலும் நடைமுறைகள் மாறும் அவை.. போட்டோக்கள் .4+ 4 * இருவருக்கும் அடையாள அத்தாட்சி காப்பி கொடுக்கணும் (உதாரணமாக பள்ளி டி சி , குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வண்டி ஓட்டுனர் அட்டை போன்றவைகள்..) கணவருக்கும், மனைவிக்கும் தனித்தனியாக ஒரு சாட்சிகள். கூடுதலாக ஒரு சாட்சி( தந்தை ஆக இருப்பது நலம்). ஆக மூன்று சாட்சிகள் திருமண பத்திரிக்கை இந்த சாட்சிகளுக்கும் அடையாள அத்தாட்சி காப்பி இணைக்கனும்.
திருமணம் நடந்து முடிந்த பள்ளிவாசலில் இருந்து திருமண சான்றிதல். குறிப்பாக மணமக்கள், ஆலிம் அவர்கள், சாட்சிகள் கையழுத்து போட்ட தப்தர் பக்கம் இருப்பது மிகவும் சிறந்தது. ( சில சமயம் இந்த கையழுத்து பக்கம் இல்லை என்றால், பள்ளிவாசலில் கொடுக்கும் திருமண சான்றிதழை நோட்டரி பப்ளிக் அவர்களிடம் அட்டெஸ்ட் வாங்கனும்).
இதை அலச்சியமாக விட்டு விட்டால் பிறது இதுவே மிகப்பெரிய பிரச்சனையாகி விடும்.
இந்த திருமாண பதிவை எந்த வித எழுத்துபிழை இல்லாமல் சரியான தகவல்களை கொடுக்கவும். மற்றும் இந்த பதிவு செய்யப்பட்ட தகவல் சரியாக இருக்கிறதா என்று ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்கவும். நமது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சனை எழுத்துபிழை தான். மற்றும் பெயருக்கு முன்னால் வரும் “இனிசியல்” (தகப்னார்/கணவர்) முதல் எழுத்தை இனிசியலுடன் பதிவு செய்வதால் மனைவிக்கு பாஸ்போட் எடுக்கும் போது நிறைய சிக்கல்கள் வருகின்றன. எனவே இவைகளை பதிவு செய்யும்போது கவணமாக இருக்கவும்.
மேலும் தகவல் பெற நமதுர் வக்கீல்கள் மற்றும் சர்பதிவு அலுவலக அதிகாரிகளை அனுகவும்.
இதை அவசியம் பகிரவும்.


No comments:
Post a Comment