பட்டரைகுளம் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் கட்டிடதுகள், மணல் முறைகேடாக கடத்தல். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 22

பட்டரைகுளம் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் கட்டிடதுகள், மணல் முறைகேடாக கடத்தல்.


ஏப்ரல் 22: முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்திலிருந்து கட்டிடத்துகள், மணல் ஆகியவை முறைகேடாக கடத்ததப்பட்டு வருகிறது.
முத் துப்பேட்டை பட்டரைக்குளத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள், வழிபாட்டு தலங்கள் கோர்ட் உத்தரவுப்படி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
விதிமுறைப்படி ஆக்கிரமிப்பு அகற்றிய செலவை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூல் செய்ய வேண்டும். இடிக்கப்பட்ட கட்டிட தூள்கள் பேரூராட்சிக்கு சொந்தமானதாகும்.
இந்நிலையில் இதை செய்ய தவறிய பேரூராட்சி நிர்வாகம் அடுத்தக் கட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு சிலர் கடந்த 3 நாட்களாக இரவு, பகல் பாராமல் 10க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் பேரூராட்சி கையகப்படுத்திய பகுதியில் கிடக்கும் கட்டிடதுகள்கள் மற்றும் மணல்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் முறைகேடாக அள்ளி, ஒரு டிராக்டர்லோடு ரூபாய் 1000க்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதனை பேரூராட்சி நிர்வாகமும், காவல் துறையும் கண்டுக்கொள்ளவில்லை. பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெறிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சித்தி விநாயகமூர்த்தியிடம் கேட்ட போது, கட்டிட துகள் கள், மணல் அள்ள பேரூராட்சி நிர்வாகம் அள்ள அனுமதி வழங்கவில்லை. கூட்ட தீர்மானத்துக்கு பிறகு தான் அனுமதிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here