டாக்டர் பட்டம் பெற இருக்கும் முத்துப்பேட்டை அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் Ex. MP. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, March 25

டாக்டர் பட்டம் பெற இருக்கும் முத்துப்பேட்டை அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் Ex. MP.


மார்ச் 24: டாக்டர் பட்டம் பெற இருக்கும் முத்துப்பேட்டை அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் Ex. MP.  
முத்துப்பேட்டை அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் M.A.    Ex. MP. அவர்களுக்கு அமெரிக்கா  உலக  தமிழ் பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் கொடுக்கப்படுகிறது.

இந்திய யூனியன் முஸ்லீம்லீக் சார்பில் வேலூரில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்றத்திற்கு சென்று இந்திய முஸ்லீம்களுக்காக  மிகச் சிறப்பாக பணியாற்றினார்.

இவரின் இந்த சீரிய பணியை பாராட்டி  அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக்கழகம் வருகிற  29ந் தேதி  மதுரையில்  டாக்டர்  பட்டம்  கொடுக்க  உள்ளார்கள்.

டாக்டர் பட்டம் வாங்க இருக்கும் M. அப்துல்ரஹ்மான் M.A Ex MP.  அவர்களுக்கு முத்துப்பேட்டை.org மற்றும் முத்துப்பேட்டை பிபிசியின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்: மணிச்சுடர் சாகுல் ஹமீது

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

    அறிவுச்சுடர் அண்ணன் அப்துர் ரஹ்மான் M.A., M.P (Ex.) அண்ணன் அவர்களுக்கு அமெரிக்கா தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்க இருப்பதாக வந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

    அண்ணன் அவர்கள் மென்மேலும் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பாக மனமாற வாழ்த்தி துஆ செய்கின்றோம்.

    நன்றி

    அன்புடன்....
    மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர்
    மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., - பொதுச் செயலாளர்
    மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.

    ReplyDelete

Post Bottom Ad

Responsive Ads Here