செப்டம்பர் 27: துபாய் “Gitex Shopper-2014” எலக்ட்ரானிக் பொருட்களின் கண்காட்சி நாளை துவக்கம்...(27-09-2014 to 04-10-2014)
உலகின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப, மின்னணு பொருட்களின் கண்காட்சிகளில் ஒன்றான துபாய் ‘Gitex Shopper' நாளை துவங்குகிறது.
மத்திய கிழக்கு நாடுகளிலேயே இது மிகப்பெரிய எலக்ட்ரனிக் பொருட்களின் கண்காட்சியாகும் இக்கண்காட்சி துபாய் World Trade Center-ல் நாளை தொடங்குகிறது. காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செப்டம்பர் 27ந்தேதி தொடங்கி அக்டோபர் 4ந்தேதி வரை நடைபெறுகிறது.
வருடா வருடம் நடைபெறும் இந்த வர்த்தக திருவிழாவில் துவக்க நாள் முதலே மக்கள் கூட்டம் அலைமோதும். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் இதில் கலந்து கொள்வார்கள்.
நுகர்வோரை கவருவதற்காக உலகின் முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனங்கள் மிகப்பெரிய சலுகைகளுடன் இக்கண்காட்சியில் பங்கேற்கும். உலகின் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகச்சிறந்த நவீன எலக்ட்ரானிக் தயாரிப்புகள் அனைத்தும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
அனைவரையும் கவரும் வகையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு தயாரிப்புகளோடும் பெரும் பரிசுகளோடும் உலகில் முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனங்கள் Gitex Shopper-ல் பங்கேற்க உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல்: கடையநல்லுர் நியூஸ்



No comments:
Post a Comment