செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நேற்று நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில், இஸ்லாமியர்கள் வீடு மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் முத்துப்பேட்டை பட்டுகோட்டை ரோட்டில் சென்றபோது இஸ்லாமியர்களின் வீடுகள் மீது சிலர் கல்வீசி உள்ளனர். இதுதொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில்புகார் செய்யப்பட்டது.
அதேபோல இன்று (04-09-2014) அதிகாலை முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மணிகண்டன் என்பவர் கடைக்குள் மண்எண்ணையை ஊற்றி மர்ம கும்பல் தீ வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்றைய ஊர்வலத்தை திருச்சி சரக ஐ.ஜி.ராமசுப்பிரமணியன், மேற்பார்வையில் தஞ்சை டி.ஐ.ஜி.சஞ்சீவ்குமார், திருவாரூர் எஸ்.பி.காளிராஜ் மகேஷ் குமார், தஞ்சை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு தர்மராஜ், ஆகியோரது தலைமையில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 2000த்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.
எனினும் கல்வீச்சு, கடை எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால், அங்கு காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே ஊர்வலத்தை மாலை 3 மணிக்கு தொடங்கி 6.30 மணிக்குள் முடித்து கொள்ள வேண்டும் என்று உயர் நிதிமன்ற நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். ஆனால் இந்த ஊர்வலம் இரவு 8.30 ணி வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்: ஆசிப்
















No comments:
Post a Comment