செப்டம்பர் 06: முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது சிலர் வீடுகளின் மீது கல் எரிந்து வீட்டை சேதப்படுத்தியதாக முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதேபோல் முத்துப்பேட்டையில் இன்னொரு தரப்பை சேர்ந்தவர்கள் ஒருகடைக்கு தீ வைத்ததாக புகார் செய்யப்பட்டது. இதன் காரணமாக பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இதைத் தொடர்ந்து இருபரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து சமாதான கூட்டம் நேற்று (05-09-2014) இரவு நடைபெற்றது. இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனார்க்கலி, மன்னார்குடி ஆர்.டி.ஓ. சுப்பு, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் உள்பட அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கறுப்பு முருகானந்தம், திருவாரூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் பேட்டை சிவா, இளைஞர் அணி கோட்ட பொறுப்பாளர் ராமலிங்கம், ஒன்றிய பா.ஜனதா தலைவர் செல்வம் மற்றும் குமாரவேல், இன்னொரு தரப்பை சேர்ந்த முகமது ராவுத்தர், மவுலானா அபுபக்கர், ஷாஜஹான், நாசர், நைனா முகமது, ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் ஒற்றுமையாக இருக்கும்படி போலீசார் அவர்களை கேட்டுக்கொண்டனர்.


No comments:
Post a Comment