சிறுவர்களை அடிமையாக்கும் ஸ்மார்ட் போன்கள்! பெற்றோர்களுக்கான எச்சரிக்கை பதிவு! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 10

சிறுவர்களை அடிமையாக்கும் ஸ்மார்ட் போன்கள்! பெற்றோர்களுக்கான எச்சரிக்கை பதிவு!


செப்டம்பர் 10: தற்பொழுது உலகம் அதன் பரினாம வளர்ச்சியின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கின்றது. அதன் விளைவை நாம் பிற நாடுகளை காட்டிலும் வளரும் நாடுகாளான இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா, சவூதி அரேபியா போன்ற நாடுகளில் அதிகளவில் காணமுடிகின்றது.

தற்பொழுது வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை விட, வேலை வாய்ப்பை விட தொழில்நுட்பத்தை வைத்தே அதிகளவில் கணிக்கமுடிகின்றது. இன்றைய காலக்கட்டங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியில் தனக்கென்று ஓரு பங்கை ஸ்மார்ட் போன்கள் பிடித்துள்ளன. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவு  நமதூரையும் விட்டு வைக்கவில்லை.

முன்பொரு காலக்கட்டத்தில் செல்போன்கள் என்றால் வசதியானவர்கள் மட்டும் உபயோகிக்கூடிய பொருள் என்ற நிலை மாறி தற்பொழுது தொழிற்போட்டியின் காரணமாகவும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் அதிக திறன் கொண்ட ஸ்மார்ட் போன்கள் மிக குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கின்றன.

பெற்றோர்களும் விலை மலிவாக தானே இருக்கின்றது என்ற காரணத்தால் தங்களுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினால் தங்கள் பிள்ளைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்கின்றனர். நமதூரில் பல பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பெற்றோர்கள் இது போன்ற ஸ்மார்ட் போங்களை வாங்கி கொடுத்திருக்கின்றனர்.

சில பெற்றோர்களிடம் இது குறித்து வினவினால், “காலம் கெட்டுப்போச்சு, அவர்களின் பாதுகாப்புக்காகதான் செல்போனை கொடுத்துள்ளோம், இதை போய் தவறாக சொல்லுகிறீர்கள் என்கின்றனர்” அவர்கள் சொல்வது சரிதான் என்றாலும் தொடர்பு கொண்டு பேசுவதற்க்கு ஒரு மலிவு விலையிலான போன் போதாதா? ஸ்மார் போன்களில் தான் பேசமுடியுமா? என்ன.

இதனால் நமதூர் பள்ளி படிக்கும் சிறுவர்களெல்லாம் அதிக விலையிலான ஸ்மார்ட் போன்களை வைத்துக்கொண்டு செல்வதை காணமுடிகிறது. இதனால் நல்ல விசயங்கள் இருந்தாலும் அதை உபயோகிக்க கூடிய பக்குவம் அவர்களுக்கு இன்னும் வரவில்லை. இந்த வயதில் அவர்கள் இது போன்ற போன்களை உபயோகிப்பதனால் தீமைகளே அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இது போன்ற ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கும் சிறுவர்கள் பலர் முகநூலிலும் கணக்குகளை திறந்து வைத்துள்ளனர். இது அவர்கள் தீய வழியில் செல்வதற்க்கு அதிகம் வாய்ப்புள்ளது.


சில சிறுவர்கள் முகநூலுக்கும் ஸ்மார்ட் போன்களில் வரும் கேம்களுக்கும் அடிமையாகிவிடுகின்றனர். இதனால் அவர்கள் தங்கள் படிப்பின் மீது இருக்கும் கவனம் சிதறுவதற்க்கும் அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது. அதுபோல் சிறுவர்கள் பள்ளிகளுக்கும், டியூஸன் சென்டர்களுக்கும் இதை எடுத்து சென்று ஆசிரியர்களுக்கு தெரியாமல் மறைமுகமாக உபயோகிக்கின்றனர். இதன் மீது கொண்ட மோகத்தின் காரணமாக சாலையில் நடந்து செல்லும் போது கூட செல்போனை உபயோகித்துக் கொண்டு செல்லும் சிறுவர்களை காணமுடிகின்றது.

இப்படி பல வகையிலும் சிறுவர்களின் கவனத்தை குலைத்து அவர்கள் படிப்பை சீரழிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட் போன்கள் இவ்வளவு சிறிய வயதில் உங்கள் பிள்ளைகளுக்கு தேவைதானா?

சிந்திப்போம்! செயல்படுவோம்!

ஆக்கம்:
நூருல் இப்னு ஜஹபர் அலி, ஆசிரியர்
அதிரை பிறை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here