ஜுலை 06: முத்துப்பேட்டை அருகே உள்ள நோக்கியூர், சித்தமல்லியை சேர்ந்தவர் காமராஜ். விவசாயி. இவரது மனைவி கவிதா (28). இவர்கள் நேற்று இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினர்.
இந்தநிலையில் இரவு 2 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் கவிதா அணிந்திருந்த 4½ பவுன் செயினை பறித்துள்ளான்.
பின்னர் அவர் அணிந்திருந்த கம்மலை கழற்றியபோது அவர் எழுந்து விட்டார். இதனால் உஷாரான கொள்ளையன் 4½ பவுன் நகையுடன் தப்பி சென்று விட்டான்.
இதுபற்றி கவிதா பெருகவாழ்ந்தான் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைபறித்த கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
கணவருடன் வீட்டில் படுத்திருந்த பெண்ணிடம் கொள்ளையன் நகைபறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


No comments:
Post a Comment