ஜுலை 31: அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு நுழைவாயிலை ஒட்டி அமைந்துள்ள ஈசிஆர் சாலையில் இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தில் தமிழன் டிவி செய்தியாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் தண்டாயுதபாணி இவரது மகன் ரமேஷ் ( வயது 32 ) தமிழன் டிவியின் செய்தியாளராக பணிபுரிகிறார். இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் ஈசிஆர் சாலையில் சென்றபோது முத்துப்பேட்டை தர்ஹாவிலிருந்து கேரளாவை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிகொண்டு சென்றது.
பேருந்து அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு நுழைவாயிலின் அருகே வந்த போது ரமேஷின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் ரமேஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அதிரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல்: அதிரை நியூஸ்



No comments:
Post a Comment