இந்தியாவில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை தேவையில்லை. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, July 4

இந்தியாவில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை தேவையில்லை.


ஜுலை 04:இந்தியாவில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை தேவையில்லை.
 பாஸ்போர்ட் பட்டுவாடா முறையை விரைவாகவும், தொந்தரவற்றதாகவும் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ள நிலையில், இனிமேல் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு போலீஸ் விசாரணை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. 

தற்போது முதன்முதலில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்லாது காலாவதியான பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்கவும், விண்ணப்பதாரர் வசிக்கும் முகவரிக்கு உட்பட்ட காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் விசாரணை கட்டாயமாக உள்ளது. இதனால் அநாவசியமான காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. 

இந்நிலையில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பவர்களுக்கு, முதலில் கொடுக்கப்பட்ட போலீஸ் விசாரணையின் அறிக்கை வில்லங்கம் ஏதுமில்லாத பட்சத்தில், இரண்டாவது போலீஸ் விசாரணை தேவையில்லை என்ற முடிவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் வந்ந்துள்ளது.

இது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சிறுவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோர் தற்போது போலீஸ் விசாரணை இல்லாமலேயே விரைவாக பாஸ்போர்ட் பெற முடியும் என வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முகேஷ் பர்தேஷி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here